| புகார் பெட்டி - சேலம் Dinamalar
புகார் பெட்டி - சேலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2019
08:10

சாக்கடையை தூர்வார வலியுறுத்தல்: ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை, என்.எஸ்., தியேட்டர், மாரிமுத்து சாலை ஆகிய இடங்களில் உள்ள சாக்கடைகளை, முறையாக தூர்வாருவதில்லை. அங்கு, குப்பை, கழிவு குவிந்து, துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில், தண்ணீர் செல்ல முடியாமல், சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரிப்பு, சுகாதார சீர்கேட்டால் அவதிப்படுகிறோம். சாக்கடையை முழுமையாக தூர்வார, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


- எஸ்.அண்ணாமலை, ஆத்தூர்.


பள்ளத்தில் விழும் வாகன ஓட்டிகள்: சங்ககிரி, பச்சக்காடு, விநாயகர் கோவில் எதிரே செல்லும் சாலை முன், தனியார் நிறுவனத்தினர், கேபிள் பதிக்க பள்ளம் தோண்டினர். ஆனால், பணி முடிந்தும், ஒரு மாதமாக மூடாமல் விட்டதால், மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் விழுந்து காயமடைவது வாடிக்கையாகி விட்டது. இதனால், பள்ளத்தை மூட, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


- எம்.லட்சுமணன், சங்ககிரி.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X