| ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு Dinamalar
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2019
08:12

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், ஆரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஊட்டச்சத்து திருவிழா, கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா, நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை, கர்ப்பகால ஊட்டச்சத்து குறித்து, டாக்டர்கள் விளக்கமளித்தனர். செவிலியர்கள், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தினர். அங்கன்வாடி பணியாளர்கள், வாழப்பாடி புளூபெல் சமையல் கல்லூரி முதல்வர் செப் சிலம்பரசன் தலைமையில் குழுவினர், ஊட்டச்சத்து உணவு குறித்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். குழந்தைகள் நல மேற்பார்வையாளர் சாந்தி, கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X