| ராகி வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு: விவசாயிகளுக்கு இலவச பனை விதைகள் Dinamalar
ராகி வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு: விவசாயிகளுக்கு இலவச பனை விதைகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2019
09:29

ஓசூர்: ஓசூர் அருகே, விவசாயிகளுக்கு இலவச பனை விதைகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த நல்லூர், நந்திமங்கலம், நாகொண்டப்பள்ளி பஞ்.,களில், வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும், மானாவாரி மேம்பாட்டு திட்ட இயக்கத்தின் சார்பில், விவசாயிகள் தங்களது தரிசு நிலங்களில் பனைமரம் சாகுபடி செய்யும் வகையில், பனை விதைகள் இலவசமாக வழங்கப்பட்டு விதைப்பு செய்யப்பட்டன. தொடர்ந்து, கூட்டுப்பண்ணைய சாகுபடி நடக்கும் வத்திரப்பள்ளி கிராமத்தில், ராகி விதைப்பு வயல்கள் மற்றும் ராகி, துவரை விதைப்பண்ணைகளை, கிருஷ்ணகிரி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் சண்முகம் ஆய்வு செய்தார். ஓசூர் வேளாண்மை உதவி இயக்குனர் மனோகரன், ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆப்தா பேகம், துணை வேளாண்மை அலுவலர் முருகேசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X