| ஓசூரில் மறியலில் ஈடுபட்ட 13 பேர் கைது Dinamalar
ஓசூரில் மறியலில் ஈடுபட்ட 13 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2019
09:30

ஓசூர்: ஓசூர் உழவர் சந்தை முன் உள்ள சாலையை, தள்ளுவண்டி கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உழவர் சந்தைக்கு வரும் வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை நிறுத்த வழி தெரியாமல், தள்ளுவண்டி கடைகளுக்கு முன்பாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, டி.எஸ்.பி., மீனாட்சி தலைமையிலான போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து, உழவர் சந்தை முன் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை நேற்று முன்தினம் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X