கோவை மண்டலத்தில் கடந்தாண்டை விட இந்தாண்டு, 20 சதவீதம் விபத்து குறைவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2019
09:30

கிருஷ்ணகிரி: ''கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கோவை மண்டலத்தில், 20 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளன,'' என, கோவை மண்டல போலீஸ் ஐ.ஜி., பெரியய்யா பேசினார்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் திருட்டு போன, 136 வழக்குகளில் தனிப்படையினர் புலன் விசாரணை மேற்கொண்டனர். அதில், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், 360 பவுன் தங்க நகைகள், வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட களவு சொத்துக்கள், நீதிமன்றம் மூலமாக பெறப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா தலைமை வகித்தார். சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப் குமார், கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர், எஸ்.பி., பண்டி கங்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் வழங்கி, ஐ.ஜி., பெரியய்யா பேசியதாவது: டாக்டர்கள் உயிரை காக்கக்கூடிய உன்னத பணியை மேற்கொள்கின்றனர். காவல் துறையினர் உயிரையும், உடமைகளையும் காக்கக்கூடிய பணிகளில் ஈடுபடுகின்றனர். மக்களை பாதுகாப்பதில் போலீசாரின் பங்கு முக்கியமானது. இந்தியாவில், தமிழக காவல் துறை முதன்மையாக விளங்குகிறது. உலக அளவில், ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக தமிழக காவல் துறை உள்ளது. கோவை மேற்கு மண்டலத்தில் விபத்துகளை குறைக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மேற்கு மண்டலத்தில், போக்குவரத்தில் எடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கையால், பெருமளவில் விபத்துகள் குறைந்துள்ளன. கடந்தாண்டை ஒப்பிடுகையில், 20 சதவீதம் விபத்து குறைந்துள்ளது. திருட்டு மற்றும் குற்றங்களை தடுக்க, 'சிசிடிவி' கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X