| ஆமை வேகத்தில் நடக்கும் சர்வீஸ் சாலை பணிகள் Dinamalar
ஆமை வேகத்தில் நடக்கும் சர்வீஸ் சாலை பணிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2019
09:32

கிருஷ்ணகிரி: சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள், ஆமை வேகத்தில் நடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.


கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி ஆவின் டைரி அடுத்த மோட்டூர் அருகே, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்வதற்காக யூ டர்ன் வளைவு அமைக்கப்பட்டிருந்தது. இதில், கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது, அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், யூ டர்ன் வளைவை தேசிய நெடுஞ்சாலை துறையினர் அடைத்தனர். இதையடுத்து, மோட்டூரில் இருந்து ஆவின் டைரி வழியாக, கிருஷ்ணகிரி நகருக்குள் செல்ல சர்வீஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு துவங்கப்பட்டது. ஆனால், இப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், பாதி அளவிற்கு கூட முடியவில்லை. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில், எதிர் திசையில் வாகனங்களை ஓட்டி வருவதால், மீண்டும் விபத்து நடந்து வருகிறது. எனவே, சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X