நோக்கமே சிதைகிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:09

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் குடிமராமத்து பணிகளில் கண்மாய்களின் கரைகள் பலப்படுத்தபட்டநிலையில் நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்காத நிலை காணப்படுவதால் இத்திட்டத்தின் நோக்கமே சிதையும் நிலை ஏற்பட்டுள்ளது.




நிலத்தடி நீர் மட்டம் நாளுக்குநாள் குறைந்து வரும்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பு கண்மாய்கள் மற்றும் ஊரணிகளை குடிமராமத்து செய்யும் திட்டத்தை அரசு அறிவித்தது. இதையடுத்து மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊரணிகளின் கரைகள் பலப்படுத்தபட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு கண்மாய்க்கும் ரூ. பல லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளின் பெயரில் தனிநபர்கள் சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர்.



இவ்வாறு செய்யபடும் பணிகளில் கண்மாய்களில் துார்வரப்படும் மண்கள் கரைகளில் கொட்டபடுகிறது. சரியான அழுத்தம் கொடுக்காததால் சிறிய மழை பெய்தாலே கரைகளின் மண்கள் சரிந்து விழும்நிலையில் உள்ளது. இக்கரைகளின் வழியாக விவசாய பொருட்களை கொண்டு செல்லமுடியாதநிலை உள்ளது. இதனால் விரைவில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழையால் மேலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் நீர்வரத்துகால்வாய்களில் கழிவுகள், செடி கொடிகள் வளர்ந்து கிடப்பதாலும் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்ட வில்லை. இதனால் மழை நீரானது துார்வாரபட்ட கண்மாய்களுக்கு வராதநிலை ஏற்பட்டுள்ளது.



இதனால் இத்திட்டத்தின் நோக்கமே வீணடிக்கபடுகிறது. இதை மாவட்டநிர்வாகம் நன்கு உணர்ந்து, வடகிழக்கு பருவமழை துவங்குமுன்பு நீர்வரத்து காய்வாய்களையும் சீரமைக்க வேண்டும்.எப்படி மழைநீர் செல்லும்மாவட்டத்தில் கடந்த 2015க்கு பிறகு சொல்லும் அளவிற்கு போதிய மழை பெய்யவில்லை. இதனால் பல குளங்கள், கண்மாய்கள், ஊரணிகள் பாழடைந்து விட்டன. இந்நிலையில் முதல்வர் அறிவித்த குடிமராமத்து பணி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மிக, மிக அதிகம்.



ஒதுக்கப்பட்ட நிதியில் 25 சதவீதத்திலே சிறப்பான முறையில் குடிமராமத்து பணிகளை செய்யலாம் என்றநிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தவறுகள் மற்றும் அலட்சியத்தால் இத்திட்டத்தின் நோக்கமே சிதைகிறது. பல இடங்களில் நீர்வரத்து பாதைகளே இல்லாமல் குளங்கள் துார்வாரப்பட்டுள்ளது. இப்படி இருந்தால் எப்படி மழைநீர் செல்லும். இதன் மீது மாவட்ட நிர்வாகம் அக்கறையுடன் செயல்படவேண்டும். -முத்தையா, தலைவர், தென்னை விவசாயிகள் சங்கம், ஸ்ரீவில்லிபுத்துார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X