| ஒரு வாரமாக இல்லை மின்சாரம் Dinamalar
ஒரு வாரமாக இல்லை மின்சாரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:16

காரியாபட்டி : அடிப்படை வசதிகள் அறவே கிடையாது. சில தினங்களுக்கு முன் அடித்த பலத்த காற்றுக்கு மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு வாரமாக மின் சப்ளை இல்லை. இதனால் தண்ணீர் சப்ளை இல்லாது பரிதவிக்கின்றனர் காரியாபட்டி முஷ்டக்குறிச்சி பெத்தாரேந்தல் மக்கள்.



இங்குதாமிரபரணி தண்ணீர் வாரத்திற்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. அதிக பட்சம் ஐந்து குடங்கள் பிடிக்கும் அளவிற்குதான் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் மின் சப்ளை இல்லாததால் தாமிரபரணி தண்ணீரும் கிடைக்காமல் சமீபத்தில் பெய்த மழைக்கு கண்மாயில் தேங்கி நிற்கும் நீரை குடி நீராகவும், புழக்கத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். சிமென்ட் ரோடு, பேவர் பிளாக் என தெருக்களில் எந்த ஒரு வசதியும் கிடையாது. மழை பெய்தால் சகதியாகி மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது .



தெரு விளக்குகள் எரிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆங்காங்கே அமைக்கப்பட்ட தெரு குழாய்கள் உடைந்து சேதமடைந்து கிடக்கிறது. பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. வயதானவர்கள், இரவில் பெண்கள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X