மேன்மையான தொண்டாகும் ரத்த தானம் ஹீமோகுளோபின் சீராக்க உதவும் அற்புதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:19

விருதுநகர் : 'நீரின்றி அமையாது உலகு' என்பது போல் ரத்தமின்றி இயங்காது நம் உடல். நம் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க ரத்தம் அவசியம். ஆக்சிஜனை அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்து செல்லும் அதிவேக ரயில் ரத்தம் தான்.



இத்தகைய முக்கியத்துவம் கொண்ட ரத்தம் என்பது எப்பொழுது யாருக்கு வேண்டுமானாலும் தேவைப்படலாம். விபத்து ,அறுவை சிகிச்சை, நோய்பாதிப்பு என அனைத்துக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அப்போது ரத்த தானம் செலுத்த விரும்புவோரை தேடி ரத்தம் பெற்று நோயாளிக்கு செலுத்துவது என்பது கஷ்டமான காரியம். ரத்த தானம் செய்பவர்களாகிய நாம் உதவும் மனப்பான்மையோடு பயமில்லாமல் ஒருவரின் உயிரைக் காக்க மனம் முன்வந்து செய்யும் மேன்மையான தொண்டே ரத்த தானம். உலகில் ஒட்டு மொத்தமாக 6.8 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் ரத்த தானம் செய்கின்றனர்.



அதற்காக தான் ரத்த தான கேம்ப்கள், விழிப்புணர்வு ஊர்வலங்கள், கருத்தரங்குகள் உலகம் முழுக்க நடைபெறுகிறது. விருதுநகர் வன்னிய பெருமாள் பெண்கள் கல்லுாரியில் நடந்த ரத்த தான முகாமில் கலந்து கொண்ட மாணவிகள் ரத்த தானம் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்கள் இதோ...ரத்த தானமே சிறந்த தானம்நம் உடலில் உள்ள ஒரே திரவ உறுப்பு ரத்தம். ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் கொடுக்கும் ரத்த தானமே எல்லா தானங்களையும் விட சிறந்த தானம்.



ரத்தத்தை தானமாக அளிப்பவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தத்தை முழுமையான பரிசோதனைக்கு அனுப்பப்படும். தற்போது நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ரத்தத்தில் உள்ள செல்களை தனித்தனியே பிரித்து பாதுகாக்கும் முறை வந்து விட்டது. ரத்தத்தில் உள்ள சிவப்பணு, வெள்ளையணு, ரத்தத்தை உறைய வைக்கும் செல், பிளாஸ்மா என எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து எடுத்து அவற்றை பாதுகாத்து வைக்கப்படுகிறது.



.பவித்ரா, இரண்டாமாண்டு ஆங்கில மாணவி , விருதுநகர்.ஒருவரால் பலருக்கு பயன்'ரத்தம் தேவைப்படும் நோயாளிகளில் பலருக்கு முழு ரத்தமும் தேவைப்படாது. உதாரணத்திற்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு சிவப்பணுக்கள் மட்டுமே தேவைப்படும். தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு பிளாஸ்மா செல் மட்டுமே தேவைப்படும். விபத்தில் சிக்கி ரத்தக் கசிவு ஏற்பட்டு ரத்தம் உறையாதவர்களுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் மட்டுமே தேவைப்படும்.



எனவே ஒருவர் அளிக்கும் ரத்தத்தின் மூலமாக பலர் பயனடையும் வாய்ப்பு ஏற்படுகிறது. மாலா, இரண்டாமாண்டு கணித மாணவி, விருதுநகர்.மாரடைப்பு வாய்ப்பு குறையும்ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், ரத்தத்தை உறைய வைக்கும் அணுக்கள் என மூன்று விதமான செல்கள் இருக்கும். ரத்தத்தில் ஏ , பி , ஓ, ஏபி என நான்கு வகைகள் உண்டு.



ஒவ்வொருவரும் தங்களது ரத்த வகையை தெரிந்து வைத்திருப்பது அவசியம். ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல நாமும் தான். உடலில் இயற்கையாக புது ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ளஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும்.மீனாட்சி, இரண்டாமாண்டு பி.காம்., மாணவி, விருதுநகர் 3 மாதம் ஒரு முறை கொடுக்கலாம்'ஓ - நெகட்டிவ்' ரத்தப் பிரிவு எளிதில் எல்லோருக்கும் ரத்த தானம் செய்யக் கூடிய பிரிவு.



'ஏபி' ரத்தப் பிரிவினையுடைய மனிதரால் எல்லா ரத்த பிரிவினையுடைய மனிதர்களிடமிருந்தும் ரத்தினை பெற முடியும். ஒருவருடைய உடலில் நான்கு முதல் ஐந்து லிட்டர்கள் ரத்தம் உள்ளது. ரத்த தானம் செய்யும் ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் கொடுக்கலாம். ரத்தமானது குறிப்பிட்ட கால அளவில் மட்டுமே தேக்கி வைக்க முடியும். இதன் காரணமாகவே ரத்த வங்கியில் அடிக்கடி ரத்தம் தேக்கி வைக்கப்படுகிறது.சந்தியாதேவி, மூன்றாமாண்டு கணித மாணவி, விருதுநகர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X