சனி தோறும் குறைதீர் கூட்டம், போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:25

புதுவண்ணாரப்பேட்டை: ''குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் புகார்கள் மீது, 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சென்னை போலீஸ் கமிஷனர், விஸ்வநாதன் கூறினார்.சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள, சமுதாய நலக்கூடத்தில், காவல்துறை சார்பில், பொதுமக்களின் பிரச்னைகளை நேரடியாக பரிசீலிக்கும் வகையில், சிறப்பு குறைதீர் கூட்டம், நேற்று நடந்தது.இதில், சென்னை போலீஸ் கமிஷனர், விஸ்வநாதன், வடக்கு மண்டல கூடுதல் ஆணையாளர், தினகரன், வடக்கு மண்டல இணை ஆணையாளர், கபில் குமார் சி சாரட்கர் ஆகியோர் பங்கேற்றனர்.குறைதீர் கூட்டத்தில், பொதுமக்கள், அவரவர் பகுதிகளில் உள்ள பிரச்னைகளை எடுத்துக்கூறி, மனுக்களை, போலீஸ் கமிஷனரிடம் நேரடியாக அளித்தனர்.கமிஷனர், விஸ்வநாதன் அளித்த பேட்டி:முதல்வர் அறிவுறுத்தலின்படி, இந்த குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. ஏற்கனவே, பொதுமக்கள் தரப்பில் கொடுக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கும் புகார்களை, இக்கூட்டத்தில் அளிக்கலாம். இந்த புகார்கள் மீது, 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும், காவல்துறை சார்பில், மண்டல வாரியாக இடங்களை தேர்வு செய்து, இதுபோன்ற குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.திருமுல்லைவாயலில், சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர், விஜயகுமாரி தலைமையில் நடந்த முகாமில், 162 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X