உதவி பெறும் பள்ளிகளில் நியமனங்களுக்கு தடை விதித்த அரசாணை நிறுத்தி வைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:31

மதுரை : அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளக்கூடாது என்ற அரசாணையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.



அரசு உதவி பெறும் சில பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தை அங்கீகரித்து சம்பளம், இதர நிலுவை பணப்பலன்களை வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கலாகின. தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்தனர்.2019 ஏப்.,9 ல் நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பில், 'இடைநிலைக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வியில் 8333 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.37 கோடி 17 லட்சத்து 59 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.



எங்களின் கவனத்திற்கு வராமல் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் நடக்கிறது. அங்கீகாரம், சம்பளம் கோரும்போதுதான் அரசின் கவனத்திற்கு வருகிறது' என தெரிவிக்கப்பட்டது.அதற்கு நீதிபதிகள், 'அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருந்தால் புதிய நியமனம் மேற்கொள்ளக்கூடாது. புதிய நியமனங்கள் மேற்கொள்ளும்பட்சத்தில் அரசு அங்கீகாரம் அளிக்கக்கூடாது. சில வழக்குகள் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு மூலம் நியமனம் மேற்கொள்ள தடையில்லை' என இடைக்கால உத்தரவிட்டனர்.



அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது மற்றும் நெறிமுறைகள் தொடர்பான அரசாணை செப்.,17 ல் வெளியானது.அதில், 'அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் சட்டப்படி, 1991-92 க்கு பின் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்பட்டிருப்பின், அதில் நிரந்தர காலி இடம் ஏற்படும்போது மீண்டும் நிரப்பக்கூடாது. அப்பணியிடம் காலாவதியாகிவிடும். கூட்டு மேலாண்மை, இதர மேலாண்மையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை மாற்றுப்பணியில் நியமிக்கும் வரை புதிய நியமனம் செய்யக்கூடாது.



புதிய நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது' என குறிப்பிடப்பட்டது.இந்நிலையில் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசாணையை எதிர்த்தும், உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை விலக்கிக்கொள்ளக்கோரியும் மனு தாக்கலானது.விசாரித்த நீதிபதிகள், 'ஒவ்வொரு மனுக்களையும் தனித்தனியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டியுள்ளது. இந்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை செப்.,17 ல் வெளியான அரசாணையை நிறுத்தி வைக்கிறோம். விசாரணை செப்.,30 க்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X