| பாதைகேட்டு உண்ணாவிரதம் Dinamalar
பாதைகேட்டு உண்ணாவிரதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:37

தேனி : தேனி ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராகாலனியில் 35 ஆண்டாக அப்பகுதி மக்கள் தனியார் இடத்தை நடைபாதையாக பயன்படுத்தினர். உரிமையாளர் நீதிமன்ற உத்தரவின்படி இடத்தில் தடுப்பு சுவர் அமைத்து பாதையை மூடினார். நடைபாதை வசதி ேகாரி 350 குடும்பத்தினர் ஐந்து நாட்களாக ஊருக்கு வெளியே புளியந்தோப்பில் போராட்டம் நடத்தினர். நேற்று பாதை கோரிய இடத்தின் அருகே 200க்கும் மேற்பட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். சரவணக்குமார் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், லோக்சபா தொகுதி பொறுப்பாளர் தமிழ்வாணன் உள்பட பலர் பேசினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X