இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை, அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:48

காட்டுமன்னார்கோவில்: இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னைக்கு, அமைதி பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் பஜீர், கடந்த 2005ம் ஆண்டு இறந்து விட்டார். அவரது உடலை, சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் மெயின் ரோட்டில் லால்பேட்டையில் உள்ள அவரது வீட்டிலேயே, அடக்கம் செய்த அவரது மகன்கள், நினைவு மண்டபம் கட்டியுள்ளனர். இந்த இடத்தில் ஆண்டுதோறும் உருஸ் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனை லால்பேட்டை ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்த்து வருகின்றனர். இப்பிரச்னை கோர்ட் வரை சென்ற போது, கோர்ட் விதித்த சில கட்டுப்பாடுடன் உருஸ் விழா நடந்து வருகிறது. ஊர் மக்கள் எதிர்ப்பால், போலீஸ் பாதுகாப்புடன் ஆண்டுதோறும் இவ்விழா நடைபெறும். இந்நிலையில் அப்துல் பைஜீர் மனைவி ஜூலைகா பீவி,75; நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடலை, தந்தையை அடக்கம் செய்த இடத்திலேயே அடக்கம் செய்ய அவரது மகன்கள் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடு, நடந்தது. இதற்கு லால்பேட்டை பொதுமக்கள், ஜமாத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லால்பேட்டையில் பதட்டம் நிலவியது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.இது குறித்து காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில், 20ம் தேதி இரவு இரவு 12 மணியளவில், காட்டுமன்னர்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.சேத்தியாத்தோப்பு எஸ்.பி., ஜவஹர்லால், இன்ஸ்பெக்டர் ராஜா, வருவாய் ஆய்வாளர் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர் ரவி, ஜமாத் நிர்வாகிகள், அப்துல்ஹமீது, அமானுல்லா, அப்துல்ரஷித், இறந்து போன ஜுலைகா பீபி மகன்கள் அப்துல்லா பைஜி, ரஹமதுல்லா பைஜி, நூருல்லா பைஜி ஆகியோர் பங்கேற்றனர்.அதிகாலை வரை நடந்த பேச்சுவார்த்தையில், ஜுலைஹா உடலை, கணவர் அடக்கம் செய்த இடத்திற்கு அருகில் அடக்கம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், எவ்வித சடங்குகளும், விழாக்களும் நடத்த கூடாது, வரும் காலங்களில் வேறு யாரையும் அடக்கம் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனை ஜுலைகா பீவி குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, நேற்று காலை 9 மணியளவில், உடல் அடக்கம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X