| நிறுவனத்தை முற்றுகையிட்ட மாணவிகள் Dinamalar
நிறுவனத்தை முற்றுகையிட்ட மாணவிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:55

கம்பம் : கம்பம், கம்பமெட்டு ரோட்டில் தனியார் நிறுவனம் வேலைவாய்ப்பு தரும் படிப்புகளுக்கென செயல்பட்டு வரு கிறது. இங்கு 2 ஆண்டு மருந்தாளுனர் பட்டயப்படிப்பு பயின்ற மாணவிகள், தங்களுக்கு நிறுவனம் வழங்கிய சான்றிதழ்களுடன் தேனி வேலைவாய்ப்பு அலுவலகம் சென்ற போது, அங்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். மருந்தாளுனர் என்பதற்கு பதில் மருந்தாளுனர் அசிஸ்டெண்ட் என தகுதி குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். இதனால்தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறி அந் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.கம்பம் வடக்கு போலீசார் அவர்களுடன் பேசினர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X