வன உயிரின வார விழா போட்டி: ஓவியம் தீட்டி அசத்திய மாணவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
02:23

பொள்ளாச்சி:ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகம் சார்பில், வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், ஜமீன்ஊத்துக்குளி நாச்சியார் பள்ளியில் நடந்தது.போட்டியை, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து துவக்கி வைத்தார். வனச்சரகர் காசிலிங்கம் முன்னிலை வகித்தார்.பள்ளி நிர்வாகிகள், பள்ளி முதல்வர் சகுந்தலா மணி மற்றும் வனவர்கள் பிரபாகரன், முருகேசன், வனக்காப்பாளர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தனர். பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த, 120 மாணவர்கள் பங்கேற்றனர்.எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., முதல் வகுப்பு மாணவர்களுக்கு, 'இயற்கை வனம்' என்ற தலைப்பிலும், இரண்டாம் முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 'தமிழ்நாட்டின் மாநில மலர்' என்ற தலைப்பிலும்; ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, 'தமிழ்நாட்டின் மாநில பறவை' என்ற தலைப்பிலும் ஓவியப்போட்டி நடந்தது.ஒன்பதாம் முதல், பிளஸ்2 வகுப்பு வரை, 'ஆனைமலை புலிகள் காப்பகம் பல்லுயிர் பரவல்' என்ற தலைப்பிலும்; கல்லுாரி மாணவர்களுக்கு, 'வன உயிரினங்கள் மீதான சுற்றுச்சூழல் தாக்கம்' என்ற தலைப்பிலும்; மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆனைமலை புலிகள் காப்பக வனத்தில் அமைந்துள்ள அமைப்பின் ஏதாவது ஒரு ஓவியம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. 'புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டால் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள்' என்ற தலைப்பில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ்2 மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடந்தது.சுற்றுச்சூழல் பேணி காப்பதன் அவசியம் என்ற தலைப்பில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சுப்போட்டி நடந்தது. ஒவ்வொரு போட்டிகளிலும், மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X