| பழங்குடியின கிராமங்களில் மருத்துவ சிகிச்சை முகாம்: 23 டாக்டர்கள் பங்கேற்பு Dinamalar
பழங்குடியின கிராமங்களில் மருத்துவ சிகிச்சை முகாம்: 23 டாக்டர்கள் பங்கேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2019
02:42

பந்தலுார்;கூடலுார், பந்தலுார் பகுதிகளில் உள்ள, 29 பழங்குடியின கிராமங்களில், 23 டாக்டர்கள் குழுவினர் சிகிச்சையளிக்கும், சிறப்பு மருத்துவ முகாம் துவக்கப்பட்டது.சேவாபாரதி சார்பில், அய்யன்கொல்லி அருகே மணல் வயல் பழங்குடியின கிராமத்தில் துவங்கிய நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலாளர் மனோஜ்குமார் வரவேற்றார். ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் செந்தில் துவக்கி வைத்து பேசுகையில், ''இந்த பகுதிகளில், தொடர் மழை மற்றும் பல்வேறு சுகாதார பாதிப்புகளால், பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில், வாரணாசி, திருப்பதி, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும்,'' என்றார்.சேவாபாரதி மாவட்ட செயலாளர் சுரேந்திரன் பேசுகையில், ''பழங்குடியின மக்களுக்கு முழு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த முகாம் நடத்தப்படுகிறது,'' என்றார்.மருத்துவ குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அர்ச்சனாசர்மா பேசுகையில், ''தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தியபோதும், இது போன்ற கடைகோடி கிராமத்தில் சிகிச்சையளிப்பது மன நிறைவை தரும். இரு நாட்கள் இங்கு முகாம் நடக்கிறது,'' என்றார்.நிகழ்ச்சியில், டாக்டர்கள் மோகித்மங்கல், கிறிஸ்மாராஜூ, சரஸ்வதி வித்யாலயா பள்ளி முதல்வர் அன்பரசி, கிராம தலைவர் பொம்மன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட நிர்வாகி சுரேஷ் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X