அப்பாடா! மதிப்பீடு தயாரிக்குது மின்வாரியம் 'மாதிரி சாலை' உருவாக்க பகீரதம் 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
02:47

கோவை:கோவை, ஆர்.எஸ்.புரம், டி.பி., ரோட்டை, 'மாதிரி சாலை'யாக்கும் திட்டத்தில், மின் ஒயர் மாற்றியமைக்க, மின்வாரியம் மதிப்பீடு தயாரிக்கிறது.


கோவையில், முக்கியமான ஆறு சாலைகளை, மோட்டார் வாகன பயன்பாடு இல்லாத பகுதியாக மாற்ற, கடந்த, 2016ல் மாநகராட்சி திட்டமிட்டது. ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோடு, டி.வி.சாமி ரோடு, என்.எஸ்.ஆர்., ரோடு, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட ஆறு சாலைகள் தேர்வு செய்தது.

அதில், டி.பி., ரோட்டில், காந்திபார்க் குடிநீர் தொட்டி வளாகம் முன்

பிருந்து, கவுலி பிரவுன் ரோடு சந்திப்பு வரை, 1.8 கி.மீ., துாரத்துக்கு, 2.10 மீட்டர் அகலமுள்ள சாலையை, 'மாதிரி சாலை'யாக மாற்ற திட்டமிட்டு, ரூ.24.71 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. பல்வேறு தடைக்கற்கள் தாண்டி, கடந்த, 2018ல் தமிழக அரசிடம் நிர்வாக அனுமதி பெறப்பட்டது.

தொலைத்தொடர்பு மற்றும் மின்வாரிய ஒயர்களை தனியாக கொண்டு செல்ல, கான்கிரீட் கட்டமைப்பு அமைக்க, ரோட்டின் இருபுறம் மரங்கள் வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திட்ட செயல்பாடு முடங்கியது.

இடைப்பட்ட நாட்களில், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்கும் வேலைகளில், மாநகராட்சி ஈடுபட்டது. மின்வாரியத்தினரிடம் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து பேசி, கூட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.


'டிரான்ஸ்பார்மர்'கள் மற்றும் 'ஸ்விட்ச்' பெட்டிகளை வேறிடத்துக்கு மாற்றுவதற்கு யார் செலவழிப்பது என்கிற சிக்கல் எழுந்தது. 'ஸ்மார்ட் சிட்டி' நிதி வழங்குவதாகவும், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில், 'டிரான்ஸ்பார்மர்' அமைத்துக் கொள்ளலாம் என கூறியதும், மின்வாரியம் சம்மதம் தெரிவித்தது. இதற்கு எவ்வளவு செலவாகும் என, மாநகராட்சி மதிப்பீடு கேட்டுள்ளது.


மின்வாரிய கோட்ட பொறியாளர் வைத்தீஸ்வரனிடம் கேட்டபோது, ''டி.பி., ரோட்டில் மாநகராட்சி அமைக்கும், கான்கிரீட் கட்டமைப்புக்குள் மின் ஒயர் கொண்டு செல்லப்படும். 'ஸ்விட்ச்' பெட்டி இல்லாமல் இருக்காது. மாநகராட்சி ஒதுக்கும் இடத்தில், அவர்கள் கொடுக்கும் டிசைனில் அமைக்கப்படும். மதிப்பீடு தயாரித்து வருகிறோம். கான்கிரீட் கட்டமைப்பு கட்டியதும், மின் ஒயர்களை மாற்றியமைத்து, இணைப்பு வழங்குவோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - coimbatore,இந்தியா
22-செப்-201906:10:25 IST Report Abuse
Raj ஏன் D .B ரோடு மட்டும்..? காந்திபுரம் கிராஸ் cut ரோடு செய்யலாமே ...மக்களுக்கு உண்மையாகவே பயன் தரும் நடை பாதையை மீட்டெடுக்க உதவும். நடை மேம்பாலம் கூட மக்களுக்கு பயன் தரும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X