கடல் பாசி இயற்கை உரம் விவசாயிகளுக்கு பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2019
01:23

கடலுார்: கடல் பாசி இயற்கை உரம் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில், வேளாண்மை துறையின் மூலம் செயல்படும் ஆத்மா திட்டம் மூலம், நாணமேடு கிராமத்தில் முன்னோடி விவசாயி பரணிதரன் சாகுபடி செய்த வெண்டை வயலில் அங்கக விவசாயம் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க இயற்கை விவசாயத்தில் கடல் பாசியில் இருந்து (சிவப்பு ஆல்கே) தயாரிக்கப்பட்ட கூழ்ம உரம் மற்றும் திரவ உரம் பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.இதற்காக ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள ஜெல் கூழ்ம உரம் 10 கிலோ மற்றும் திரவ கடல் பாசி உரம் இரண்டரை லிட்டர் ஆகிய இடுபொருட்களை முன்னோடி விவசாயிக்கு, கடலுார் வேளாண்மை இணை இயக்குனர் முருகன் வழங்கினார்.கடலுார் வட்டார வேளாண்மை இணை இயக்குனர் பூவராகவன், கூழ்ம உரம் மற்றும் திரவ உரங்களை பயன்படுத்தும் முறைகள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார்.வேளாண் அலுவலர் சுகன்யா, உதவி வேளாண் அலுவலர் சிவமணி ஆகியோர் இயற்கை விவசாயத்திற்கு தேவைப்படும் இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கினர்.ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்ணன், அருண்ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X