கோவை-ராமேஸ்வரம் ரயில்களை இயக்க நிர்வாகம் முன்வருமா? எதிர்பார்ப்பில் தென் மாவட்ட பயணிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2019
07:14

மதுரை : மதுரை வழியாக கோவையிலிருந்து ராமேஸ்வரம், துாத்துக்குடிக்கு கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.



மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது இந்த வழித்தடத்தில் அதிக ரயில்கள் இயக்கப்பட்டன. அகல ரயில் பாதை அமைப்பதை காட்டி இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் கூட இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை.



சமீபத்தில் எம்.பி.,க்களுடன் தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சேலத்தில் நடந்த கூட்டத்தில் ரத்தான கோவை-ராமேஸ்வரம், துாத்துக்குடி ரயில்களை இயக்க எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். அதை பரிசீலித்த சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.



கோவையில் இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:30 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் வகையிலும், அங்கிருந்து இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:00 மணிக்கு கோவை செல்லும் வகையிலும், கோவையில் காலை 9:00 மணிக்கு புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு துாத்துக்குடி செல்லும் வகையிலும், அங்கிருந்து மாலை 6:05 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு மறுநாள் காலை 9:45 மணிக்கு செல்லும் வகையிலும் ரயில்களை இயக்கலாம் என பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை கோட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.



தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் கோட்ட செயலர் ரபீக் கூறுகையில், ''இந்த வழித்தடத்தில் இயங்கி ரத்தான ரயில்களை தான் தற்போது விட வலியுறுத்தப்படுகிறது. புனலுார்- கொல்லம் இடையே 45 கி.மீ., துாரத்திற்கு ஒரு நாளில் 10 ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் போக்குவரத்து மிகுந்த கோவை-ராமேஸ்வரம், துாத்துக்குடி வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்,'' என்றார்.



தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கோட்ட செயலர் சங்கரநாராயணன் கூறுகையில், ''மதுரை மற்றும் சுற்றியுள்ள மக்கள் வேலைக்காக கோவை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். மதுரை வழியாக கோவைக்கு பகல் மற்றும் இரவில் தலா ஒரு ரயில் மட்டுமே இயங்குகிறது. கூடுதல் ரயில்களை இயக்கினால் ரயில்களில் கூட்ட நெருக்கடியை தவிர்ப்பதுடன், ரயில்வேக்கும் கணிசமான வருவாய் கிடைக்கும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
24-செப்-201907:04:32 IST Report Abuse
Rajarajan அதேபோல், சென்னை எழும்பூர் - சேலம் இடையே காலை / மாலை நேர இன்டெர்சிட்டி இயக்கவேண்டும். இதனால் கோவை எஸ்பிரஸில் கூட்டம் குறையும். இரவு நேரத்தில், இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில் தேவை. மேலும் சில ரயில்களை இந்த வழித்தடத்தில் திருப்பி விடுதல் போன்றவையும் தேவை. ஆனால், நமது முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் தென்னகத்திருக்கு ரயில்களை இயக்க விடாமல், டெல்லியில் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகின்றனர். காரணம், இவர்கள் தென்மாநிலங்களில் இயக்கம் தங்களது தனியார் பேருந்துகளில் வருவாய் நசிந்துவிடும் என்பதற்காகத்தான். சந்தேகம் இருப்பவர்கள், டெல்லியில் ரயில் பவன் அதிகாரிகளை கேட்டு தெரிந்துகொள்ளவும். பயணியர் சங்கங்கள் ஒன்று சேர்ந்து, ரயில்வே துறை மீது பொது நல வழக்கு தொடர்ந்தால், இந்த பிரச்சினை உடனே முடிவுக்கு வரும். ஊதும் சங்கை ஊதியாகி விட்டது, இனி விடியலை நோக்கி போகவும்.
Rate this:
Cancel
DHARMARAJ - Sankarankovil,இந்தியா
23-செப்-201912:48:43 IST Report Abuse
DHARMARAJ செங்கோட்டை ரயிலயும் இயக்க வேண்டும்
Rate this:
Cancel
Muthu - Udumalipettai ,இந்தியா
23-செப்-201911:27:12 IST Report Abuse
Muthu மிக மிக அவசியமானது . ஏற்கனவே மிகவும் லாபகரமாக அனைத்து பயணிகளும் பயனுறும் வகையில் மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரயில்கள் அவை. பிராட் கேஜ் விரிவாக்கத்துக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டவை. அவைகள் மீண்டும் இயக்க படுவது அவசியமான ரெகுலர் தேவை . தெற்கு ரயில்வே உடனடியாக எந்த விட தயக்கமும் இன்றி செயல் படுத்த வேண்டும் . அனைத்து மக்களும் பயனடையவர் ரெயில்வேக்கும் கணிசமாக லாபமானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X