கம்ப்யூட்டர்களை 'ஹேக்' செய்யும் இமெயில் எச்சரிக்கை மதுரையிலும் கைவரிசை காட்டி நூதன கொள்ளை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

04 அக்
2019
02:28
பதிவு செய்த நாள்
அக் 04,2019 01:26

மதுரை,:இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ்., அனுப்பி கம்ப்யூட்டர், அலைபேசி களை ஹேக்' செய்து பணம் பறிக்கும் கும்பல் மதுரையிலும் கைவரிசை காட்ட துவங்கியுள்ளது.

மதுரை மாவட்டம் செக்கானுாரணியில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருப்பவர் மகேந்திரன். நேற்று முன்தினம் கம்ப்யூட்டரில் இவருக்கு வந்த இமெயிலை பார்க்க 'கிளிக்' செய்தபோது கம்ப்யூட்டர் செயல்படாமல் ஹேக்' ஆனது.


சிறிது நேரத்தில் கம்ப்யூட்டரில் இருந்த அனைத்து போட்டோ மற்றும் வீடியோ பைல்கள் வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி 'ரீட் மீ' என்ற வாசகம் மட்டும் வந்தது.

அதை 'கிளிக்' செய்த போது, 'நாங்கள் உங்கள் கம்ப்யூட்டரை 'ஹேக்' செய்துள்ளோம். அனைத்து தகவல்களும் மீண்டும் வேண்டும் என்றால் 980 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.74 ஆயிரம்) வழங்க வேண்டும். 72 மணி நேரத்திற்குள் அந்த வைரஸில் குறிப்பிட்டுள்ள இமெயிலில் தொடர்பு கொண்டால் 50 சதவீதம் தள்ளுபடி செய்து 490 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.37 ஆயிரம்) செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பணத்தை செலுத்தாவிட்டால் தங்களுடைய அனைத்து தகவல்களையும் பயன்படுத்த முடியாது என்ற எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. இதுகுறித்து மதுரை சைபர் கிரைம் போலீசில் மகேந்திரன் புகார் கொடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


உஷார் மக்களே உஷாரு!

சிலரது அலைபேசிக்கு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம்., கார்டு ரகசிய எண்ணை பெற்று பணத்தை திருடுவது நடக்கிறது. அதேபோல் தங்களது வங்கி கணக்கில் நாங்கள் ரூ. 2 லட்சம் டாலர்கள் செலுத்த தயாராக உள்ளோம். தகவல்களை தெரிவித்து பணத்தை பெறலாம். நீங்கள் ஒரு லட்சம் டாலர் பரிசு பெற்றுள்ளீர்கள். என்ன விபரம் என தெரிந்துக்கொள்ள உடனே தொடர்பு கொள்ளுங்க... இப்படி தினமும் எஸ்.எம்.எஸ்., இமெயில் வருகின்றன. கொஞ்சம் சபலப்பட்டு தொடர்பு கொண்டாலோ, 'கிளிக்' செய்தாலோ பணம் அம்போதான். எனவே தேவையற்ற இமெயில், எஸ்.எம்.எஸ்.,சை பார்க்காமல் அழித்துவிட்டால் 'ேஹக்' ஆவதில் இருந்தும், பணம் திருடு போவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
04-அக்-201905:31:06 IST Report Abuse
 nicolethomson இந்த செய்தியை பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன்
Rate this:
Share this comment
Cancel
04-அக்-201902:22:19 IST Report Abuse
கதிர் கொத்து பரோட்டா போடணும் அவன
Rate this:
Share this comment
Cancel
kathir -  ( Posted via: Dinamalar Android App )
04-அக்-201902:20:07 IST Report Abuse
kathir need to chop them
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X