திருப்பூர்:திருப்பூர் சத்யா கூட்டுறவு சங்கத்தில் நிர்வாக கூட்டமே நடத்துவதில்லை, என அதன் இயக்குனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திருப்பூர் சத்யா தொழிலியியல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. சங்கத தலைவர் மற்றும் இயக்குனர்கள் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர்.
இதன் இயக்குனர்கள் கூறியதாவது:நிர்வாக குழு பொறுப்பபேற்றது முதல் இது வரை எந்த கூட்டமும் நடத்தப்படவில்லை. தலைவர் தன் இஷ்டம் போல், கூட்டம் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றியும் அதிகாரிகள் உதவியுடன் கணக்கு காட்டுகிறார். இந்த விவரம் தெரிய வந்த பின் தற்போது, அனைவரையும் கூட்டத்தில் பங்கேற்று கையொப்பம் போட வேண்டும் என கேட்கிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து சங்க செயலாளர் வாசுகியிடம் கேட்ட போது, 'நான் வெளியூரில் இருக்கிறேன். என்னவென்றாலும், தலைவரிடம் கேளுங்கள்' என்றார்.இது குறித்து, தலைவர் சுகுமாரிடம் கேட்ட போது, 'எல்லாம் சரியாகத் தான் நடக்கிறது' என்று கூறி, மொபைல் போன் தொடர்பை துண்டித்தார். இதுகுறித்து, உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர்.