| சேவல் சண்டை Dinamalar
சேவல் சண்டை
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 அக்
2019
03:53

நான்கு பேர் கைதுரூரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமையில் போலீசார் ரோந்து மேற்கொண்டு, வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். செவந்தாம்பாளையம் அருகே சேவல் சண்டை நடந்து வருவதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட, மனோஜ், 24 உட்பட, நான்கு பேரை கைது செய்து, மூன்று சேவல், 3 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.மது விற்பனை; 14 பேர் கைதுதிருப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். கே.செட்டிபாளையம், எம்.எஸ்., நகர், சக்தி நகர் பகுதியில் 'டாஸ்மாக்' மதுக்கடை அருகே உள்ள கடைகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, 14 பேரை கைது செய்து, 175 மதுபாட்டில்களைபறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X