கணவர் மீது வழக்குப்பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2019
04:05

திருப்பூர், காந்தி நகரை சேர்ந்தவர் ஹீரா, 29. இவர் முகமது ஜவீத் ரபி, 34 என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இவர் நெதர்லாந்து நாட்டில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். வெளிநாட்டில் இருந்த போது, மனைவியை, கணவர் துன்புறுத்தியுள்ளார். அதன்பின், திருப்பூர் திரும்பிய மனைவியை மீண்டும் துன்புறுத்தினார். இதுதொடர்பாக மனைவி அளித்த புகாரின் பேரில், வடக்கு அனைத்து மகளிர் போலீசார், முகமது ஜவீத் ரபி உட்பட, இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கார் திருடிய வாலிபர் கைது

திருப்பூர், பெரிச்சிபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 60. இவரிடம், தேனி, அல்லி நகரை சேர்ந்த விக்னேஷ், 24 என்பவர் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காரை திருடி கொண்டு தப்பித்து விட்டார். இதுகுறித்து புகாரின் பேரில், தெற்கு போலீசார் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.கஞ்சா விற்ற நபர் கைது

திருப்பூர், சென்ட்ரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். ஆண்டிபாளையம் நொய்யல் ஆற்றோரம் சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்பகுதியை சேர்ந்த கார்த்தி, 29 என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து, 250 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.நகை பறித்த வாலிபர் கைது

அவிநாசி அருகே சேவூர், கஸ்பா கானுாரை சேர்ந்தவர் பூவாத்தாள், 70. இவர் கடந்த 1ம் தேதி சின்னக்கானுார் அருகே நடந்து சென்றார். டூவீலரில் வந்த மர்ம நபர்கள், 6.5 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், திருப்பூர் கே.வி.ஆர்., நகரை சேர்ந்த லோகநாதன், 27 என்பவரை கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X