அரியலூர் வாலிபர் சிக்கினார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2019
00:59

வீரபாண்டி, தாய் நகரை சேர்ந்தவர் பிரபு, 35. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்சில் பயணித்தபோது, இவரது மொபைல்போனை ஜேப்படி செய்ய முயன்ற அரியலுாரை சேர்ந்த மாயகண்ணன், 29 என்பவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து வீரபாண்டி போலீசில் ஒப்படைத்தார்.பிரின்டிங் தொழிலாளி கைது

திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 38; பிரின்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு, அதே பகுதியை சேர்ந்த வரதராஜன், 47 என்பவர் வேலை செய்து வந்தார். திருநாவுக்கரசு உடன் வாக்குவாதம் செய்த வரதராஜன், ஸ்கூரு டிரைவரை எடுத்து குத்தி, மிரட்டல் விடுத்தார். சென்ட்ரல் போலீசார்வரதராஜனை கைது செய்தனர்.போலி ஆடைகள் தயாரிப்பு?

எம்.எஸ்., நகரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்று, உரிய அனுமதி பெறாமல், பிரபல நிறுவனங்களின் 'லோகோ'வை பயன்படுத்தி, போலியான பனியன் ஆடைகளை தயார் செய்வதாக டெல்லியை சேர்ந்த மகேஷ் வி கம்பளி என்பவர் புகார் அளித்தார். வடக்கு போலீசார், பனியன் நிறுவன உரிமையாளர் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.தனியார் நிறுவன ஊழியர் பலி

திருப்பூர் தாராபுரம் ரோடு கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் செல்வக்குமார், 37; பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இரவு வேலை முடிந்து பஸ்சில் வீட்டுக்கு திரும்பினார். ஒத்தக்கடை பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்து சென்றபோது, வாகனம் மோதியதில், பலியானார்.பெண்ணை கொன்றவர் கைதுதாராபுரம் பொள்ளாச்சி ரோடு கூடல்மாநகரில் உள்ள காட்டுப் பகுதியில், 35 வயது மதிக்க தக்க பெண்ணின் சடலம் கிடப்பதாக அலங்கியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை பார்வையிட்டனர். அடையாளம் தெரியாத வகையில் முகம் எரிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இறந்தவர் யார், ஊர் உள்ளிட்டவை குறித்து அலங்கியம் போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனையில், பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதும், பெட்ரோல் ஊற்றி முகத்தை எரித்ததும் தெரிய வந்தது. கொல்லப்பட்டவர், தாராபுரத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி, மகாலட்சுமி, 35 என்பதும், சில நாட்களாக காணவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.அவரை கொலை செய்தது, கட்டட தொழிலாளி சின்னப்பன், 45 என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை பிடித்து விசாரித்தனர்.


அதில், இருவருக்கும் கடந்த ஒரு ஆண்டாக பழக்கம் இருந்து வந்தது. திடீரென, மகாலட்சுமி வேறு ஒருவருடன் பழகி வந்தார். இதையறிந்த சின்னப்பன், பழக்கத்தை கைவிட சொல்லி மகாலட்சுமிக்கு அறிவுறுத்தினார். இதை கேட்க மறுத்து விட்டார். இருவரும் தனிமையில் சந்தித்த போது, இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. கழுத்து நெரித்து கொலை செய்தது தெரிந்தது. அவரை அலங்கியம் போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X