| தச்சம்பத்து- நெடுங்குளம் சாலை விபத்து அதிகரிப்பு :2 ஆண்டுகளில் மூவர் பலி Dinamalar
தச்சம்பத்து- நெடுங்குளம் சாலை விபத்து அதிகரிப்பு :2 ஆண்டுகளில் மூவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 அக்
2019
03:39

மதுரை: சோழவந்தான் அருகே தச்சம்பத்து - நெடுங் குளம் சாலையில் பராமரிப்பு இன்றி குண்டும், குழியுமாக மாறி விட்டது. பல்வேறு சம்பவங்களில் சாலையின் குழிக்குள் சிக்கி கடந்த இரண்டு ஆண்டுகளில் பாலிடெக்னிக் மாணவர் உட்பட மூவர் பலியாகி உள்ளனர்.தச்சம்பத்து - நெடுங்குளம் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2 கி.மீ., தொலைவில் கிராமச் சாலை திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கப்பட்டது. தரமற்ற சாலை குறுகிய காலத்திலேயே பலமிழந்தது. குண்டும் குழியுமான சாலையில் பள்ளி, கல்லுாரிக்கு சைக்கிள், டூவீலரில் செல்லும் மாணவ, மாணவியர் கீழே விழுந்து காயமடைந்து வருவது வழக்கமாக விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இச்சாலையில் சென்று விபத்தில் சிக்கி நெடுங்குளம் பாண்டியம்மாள் 70, பாலிடெக்னிக் மாணவர் அருண் 18, விவசாயி கருப்பன் 53, ஆகியோர் பலியாகினர்.


இந்த அவலம் குறித்து தினமலர் கடந்த அக்.,1 ல் படத்துடன் செய்தி வெளியிட்டது. இதையடுத்து மண்ணை கொட்டி குழிகளை மூடினர். தற்போது பெய்த மழையால் கொட்டிய மண் கரைந்து மீண்டும் குண்டும், குழியுமாக மாறி விட்டது. சோழவந்தான் ரயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் கட்டுமானப்பணி ஆமை வேகத்தில் நடப்பதால் வாகனங்கள் நெடுங்குளம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. விபத்து அபாயம் அதிகம் உள்ள இச்சாலையை கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் தரமான தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X