பிரம்மாக்களை உருவாக்கும் அறிவியல் கண்காட்சி அறிவு சிந்தனை அதிகரிக்க உதவியதாக பெருமிதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2019
02:12

சிவகாசி:மாணவர்கள் தங்களது அறிவை விரிவுபடுத்தி கொள்வதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர். மாணவர்கள் தாங்களாகவே பல்வேறு அறிவியல் சார்ந்த பொருட்களை உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவார்கள்.




இதற்காக பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்துவர். இதில் மாணவர்கள் தங்களது சுய கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைப்பர். இது காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து கருத்து செறிவூட்டி சிந்திக்கவும் ,கனவு காணவும் செய்யும் ஒரு நிகழ்ச்சி. அறிவு மற்றும் செயல் திறன்களை வெளிப்படுத்தி புதியன படைக்கவும் ஆழ்மனதில் உள்ள எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கவும் வாய்ப்பாக அமைகிறது.





இதோடு அறிவியல் கற்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.அணு முதல் ஆகாயம் வரை அதன் அரசாட்சிதான். விண்ணை தாண்டியும் அழைத்து போய் இப்பிரபஞ்சத்தின் அதிசயங்களை காண உதவுகிறது. சாதனைகள் பலவற்றை சாத்தியமாக்குகிறது. அறிவியலில் சாதிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது.




எதிர்கால கனவுகளோடு இருக்கும் பள்ளி மாணவர்களிடத்தில் அறிவு கொட்டிக் கிடக்கிறது. மாணவர்களின் அறிவியல் திறமையை வெளிப்படுத்தவே பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் மாணவர்களின் படைப்புகள் வியக்கத்தக்க வகையில் இருக்கும். மாணவர்களின் திறனை ஆக்கபூர்வமாகவும் , அறிவுபூர்வமாகவும் பெற வேண்டியது ஆசிரியர்கள், பெற்றோரின் கடமையே.




பள்ளிகள் வெறும் புத்தகத்தை போதிக்கும் இடமாக இல்லாமல் மாணவர்களின் அறிவு திறமையை விரிவடைய வைக்கும் போதி மரமாக இருக்க வேண்டும். அந்த வகையில் மாணவர்களின் திறமையை வெளிபடுத்தும் வகையில் பள்ளி கல்வி இயக்ககம் மற்றும் சிவகாசி கல்வி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணைந்து மாவட்ட அளவிலான 47 வது ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சியனை சிவகாசி ஸ்ரீ செண்பக விநாயகர் மெட்ரிக் .,பள்ளியில் நடத்தியது. சிவகாசி கல்வி மாவட்டத்தில் 52 பள்ளிகளின் மாணவர்கள் 168 படைப்புகள் சமர்ப்பித்திருந்தனர்.



அறிவியலின் விந்தைகள்



எதிர்காலத்தில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு என்ற தலைப்பில் அறிவியல் மாதிரியை காட்சிப் படுத்தினோம். மின்காந்த தேற்றத்தின் அடிப்படையில் தொடர் வண்டி உருவாக்கம் பற்றி எடுத்துரைத்தோம். வானம் எட்டி விடும் துாரம்தான் என்பதற்கேற்ப அறிவியல் கண்காட்சியால் எங்கள் அறிவும் விரிந்து சென்றதை உணர முடிந்தது. அறிவியலின் விந்தைகள் அற்புத ஆற்றல் என்பதை உணர்ந்து கொண்டோம்.


தனஸ்ரீ, 9 ம் வகுப்பு மாணவி.



திறமை வெளிப்படுத்த வாய்ப்பு




அறிவியல் என்றாலே ஆச்சர்யம்தான். கண்காட்சியில் பங்கேற்றதால் அறிவு சிந்தனை அதிகரித்தது. இன்னும் பலவற்றை உருவாக்க வேண்டும் என்ற வேட்கை கிடைத்தது. புதிது புதிதாக கற்றுக் கொள்ள துாண்டியது. எங்களின் கண்டுபிடிப்புகளை மற்ற பள்ளி மாணவர்களுக்கு விளக்கினோம். அவர்கள் ஆர்வமுடன் கேட்டனர். பள்ளியில் இது போன்ற அறிவியல் கண்காட்சி நடத்தியதால் எங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டது.


கனிஷ்கா, 9 ம் வகுப்பு மாணவி.



அறிவை மேம்படுத்தும் களம்



கண்காட்சியில் ஆரோக்கியமும் துாய்மையும் என்ற தலைப்பில் அறிவியல் மாதிரியை உருவாக்கினேன். உடல் நலத்தை இழந்து விட்டால் அனைத்தையும் இழந்து விட்டோம் என்பதை உணர்த்தும் வகையில் துாய்மை குறித்து மாணவர்களுக்கு விளக்கினேன். பல்வேறு அற்புதங்கள் அறிவியல் வழியாக சாத்தியம் எனவும், அறிவை மேம்படுத்தி கொள்ளும் களமாக அறிவியல் திகழ்கிறது என்பதையும் அறிந்து கொண்டேன்.


பாமினி ரிஷா , 8 ம் வகுப்பு மாணவி.



கற்றுக்கொள்ள ஆர்வம்



எரிபொருளற்ற வாகன பயன்பாடு எதிர்காலத்தில் தேவை என்பதை உணர்த்தும் வகையில் எனது மாதிரியை உருவாக்கினேன். இன்றைய உலகில் வாகனமின்றி மனிதனின் நகர்வு என்பது சாத்தியமற்றது. மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஆற்றல்களான சூரிய ஆற்றல் , மின்னாற்றல் ஆகியவற்றை பயன்படுத்தி மட்டுமே வாகனங்களை நாம் பயன்படுத்த முடியும். பல்வேறு பள்ளி மாணவர்கள் கண்காட்சியில் பங்கேற்று தங்கள் மாதிரிகளை காட்சிப் படுத்தியாதால் அவற்றையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.



ஹரிபிரகாஷ், 9 ம் வகுப்பு மாணவர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X