தவம் போல் சேகரிக்கப்படும் நாணயங்கள்: அணையா விளக்கு போல் எரியும் வியாபாரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2019
02:20

விருதுநகர்:நாணயங்கள் சேகரிப்பது பலருக்கு பொழுதுபோக்கு. ஆனால் சிலருக்கு அது மிகப்பெரிய சாதனை போன்றது. உலகில் உள்ள சில அரிய வகை நாணயங்களின் மதிப்பு பல கோடி மதிப்புடையது.




இன்றளவும் இந்த வியாபாரம் அணையா விளக்கு போல் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வியாபாரம் உலகம் முழுவதும் சப்தமில்லாமல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாணயம் சேகரிப்பு ஒரு கலை என்றே சொல்லலாம். இதற்கு நுமிஸ்மாடிக்ஸ் என்று பெயர். பழைய கிடைத்தற்கரிய நாணயத்தின் மதிப்பு அந்நாணயத்தில் அச்சிடப்பட்டுள்ள மதிப்பை விட பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுகிறது. அதனால் தான் சிலர் அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்து அதை சேகரிப்பதில் தங்களை ஈடுபடுத்தி கொள்கின்றனர்.




நாணயங்களை ஒரு தவம் போல் சேகரித்து வரும் விருதுநகர் காசுக்கடை பஜாரில் 'சர்ப்பம்' என்ற பெயரில் எல்க்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வரும் முருகவேல் தன்னுடைய நாணய சேகரிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்...




“எனக்கு 59 வயது ஆகிறது. நான் 10 வயதில் இருந்தே நாணயங்கள் சேகரிப்பு ,பழைய ரூபாய் தாள்கள் சேகரிப்பு போன்றவற்றில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறேன். நான் சேகரித்த நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கை அதிகமானது. அதை எடுத்து அடுக்கி வைப்பது, சுத்தப்படுத்துவதே பிடித்த பொழுதுபோக்காக இருந்தது.



சுதந்திரத்திற்கு முன் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் , காகித நோட்டுகள் , மிகச்சிறிய நாணயங்கள் , அமெரிக்கா , தாய்லாந்து , ரஷ்யா , சிங்கப்பூர் , மலேசியா , இலங்கை , சவுதி அரேபியா போன்ற பல நாடுகளின் கரன்சி நோட்டுகள் என என்னிடம் ஏராளமான நாணயங்கள், ரூபாய்தாள்கள் இருக்கின்றன.




நம் நாட்டில் முதன் முதலில் வெளியிடப்பட்ட ரூ.100 , ரூ.50 , ரூ.20 , ரூ.10 , ரூ.5 , ரூ.2 , ரூ.1 என ரூபாய்தாள்கள் சேகரித்து வைத்திருகிறேன். ஓட்டை காலணா போன்ற பழைய நாணயம் , வெளிநாட்டு நாணயங்கள் என பலவித நாணயங்கள் என்னிடம் உள்ளது. காமராஜர் உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் வெள்ளி நாணயம், செம்பினால் தயாரிக்கப்பட அபூர்வ நாணயமான ஒரு அணா என கிடைத்தற்கரிய நாணயங்களும் என்னிடம் அதிகமாக உள்ளது.



ரூபாய்தாள்களின் விலையானது அந்த ரூபாய்தாள்களின் வாழ்நாள் , பயன்பாடு போன்ற அம்சங்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இன்றைய நிலையில் பழைய கரன்சிகளுக்கு மவுசு அதிகம் என்பதால் போட்டிப் போட்டு வாங்குகின்றனர். விற்பவர்களும் அதிக விலைக்கு விற்கின்றனர். எனக்கு சேகரிப்பதில் மட்டுமே ஆர்வம் , ”என்றார்.




பல வடிவம்






இந்தியாவில் 1957 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு 'அணா' என்ற நாணயம் புழுக்கத்தில் இருந்தது. அதாவது பதினாறு அணா கொண்டது ஒரு ரூபாய் ஆகும். 'காலணா' , 'அரையணா' , 'ஒரு அணா' , '2 அணா' , '4 அணா' '8 அணா' என்று சில்லரை நாணயங்கள் புழுக்கத்தில் இருந்தன. அதன்பின் இந்த அணா நாணயத்தை மாற்றி புதிய பைசா நாணய முறையை கொண்டு வரப்பட்டது.




16 அணா என்ற கணக்கை மாற்றி , ஒரு ரூபாய்க்கு 100 காசு என்ற புதிய கணக்கு கொண்டு வரப் பட்டது. ஒரு அணா என்பது 6 காசு ஆனது. கணக்கு போடுவதை சுலபமாக்குவதற்கு இந்த பண மாற்று முறை அறிமுகப்படுத்தப்பட்டது . இவ்வாறு நம் நாட்டிலே பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் பல வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.-



ராஜராஜன், பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர், விருதுநகர்




கண்ணில் காட்டமாட்டேன்






நான் பள்ளி பருவத்தில் இருந்தே நாணயங்கள் சேகரிப்பு ,பழைய ரூபாய்தாள்கள் சேகரிப்பு போன்றவற்றில் ஆர்வமுடன் ஈடுபடுவேன்.நான் வாங்கும் கரன்சி நோட்டுகள் உண்மையானதா அச்சிடப்பட்ட ஆண்டு , தரம் ஆகியவற்றை மதிப்பிட்டே வாங்குவேன். என்னைப் போல் நாணயம் சேகரிப்பவர்கள் வித்தியாசமாக யோசிப்பார்கள் . சிலர் ரூபாய் நோட்டுகளில் உள்ள உலக தலைவர்களின் படங்களை தேடிப்பிடித்து சேகரிப்பார்கள்.




சிலர் என்னிடம் நாணயங்களை விலைக்குக் கேட்டு வருவார்கள். நான் அவர்களிடம் நாணயங்களை கண்ணில் கூட காட்ட மாட்டேன். எனவே பழங்கால ரூபாய் நோட்டுகள் மற்றும் பண்டைய பொருட்கள் ஏதேனும் உங்களிடம் இருந்தால் உடனே பத்திரப்படுத்துங்கள்.-



உமர் பாரூக், ரீசார்ஜ் கடை, விருதுநகர்

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
14-அக்-201910:37:21 IST Report Abuse
padma rajan புழக்கத்தில் விடாமல் பதுக்கி வைப்பது குற்றம். இதனால் தான் சில்லரை தட்டுப்பாடு ஏற்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X