சிவகாசி:சிவகாசி ஜமீன்சல்வார் பட்டி ரவீந்திரா பயர் ஒர்க்ஸ் ஆலையில் நேற்று முன்தினம் நடந்த வெடி விபத்தில் ஆலமரத்துபட்டி முத்துப்பாண்டி பலியானார். பட்டாசு ஆலை உரிமையாளர் பாஸ்கரன், போர்மென் அழகர்சாமி, மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர். போர்மென் அழகர்சாமி, மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.