மரத்திற்கு உயிர் கொடுத்த மாணவர்கள் அரும் பணிகளுக்கு வித்திடும் கல்லுாரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2019
02:58

அருப்புக்கோட்டை:உலகின் நாசி மரங்கள் என்றால் அது மிகையாகாது. நாம் மூக்கின் வாயிலாக சுவாசிக்கிறோம். ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகிறோம். மரங்களோ கார்பனை-டை-ஆக்சைடை உள் இழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன.



மரங்கள் சுவாசிப்பதன் மூலம் தான் இந்த உலகம் உயிர்ப்போடு உள்ளது. இதனால் தான் மரங்கள் அடர்ந்த காடுகளை உலகின் நுரையீரல் என்கிறோம். அமேசான் காடுகள் எரிந்தபோது இந்த உலகமே கண்ணீர் விட்டு அழுதது. மரங்கள் சுவாசிப்பதை நிறுத்தினால் முதலில் மரணிப்பது மனிதன் தான்.




நம்மை இந்த உலகத்தை மரணத்தின் பிடியில் இருந்து காக்கும் மரங்களை நாம் வேரோடு வெட்டி சாய்த்து மரணிக்க வைக்கிறோம்.ஆதி மனிதனுக்கு வசிப்பிடம் தந்தது மரங்களே. மரப்பொந்துகள் தான் மனிதனின் முதல் வீடு. காய், கனி, பூ என உணவை தந்த மரங்களே மனிதனுக்கு முதல் உடையையும் தந்தது. இலை, தழைகளை ஆதி மனிதன் அணிந்து கொண்டு தன் மானத்தை காத்தான். உணவு, உடை, இருப்பிடம் என மனிதனுக்கு வாழ்வாதாரம் தந்த மரங்களே, மனிதன் நோய்வாய் பட்ட போது மருந்தாகவும் பயன்பட்டது.




முற்காலத்தில் தாகம் தீர்க்க கிணறு வெட்டுதல், கல்வி புகட்டல், நிழல் தரும் மரங்கள் வளர்த்தல் ஆகியவை மிக பெரிய அறச் செயலாக பார்க்கப்பட்டது. அசோகர் போர் செய்து பல உயிர்களை கொன்றார் என்பதை விட மரம் நட்டார் என்ற அறச் செயலே பேசப்படுகிறது. அசோகர் மரக் கன்றுகளை நடவில்லை. நன்கு வளர்ந்த நிழல் தரும் மரங்களை நட்டுள்ளார் என கருத வேண்டியுள்ளது. மரங்கள் எளிதாக வேர் பிடித்து வளரக் கூடியது. ஆடு, மாடுகள் சேதப்படுத்த முடியாது.




வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற நிலை மாறி இன்றைக்கு ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்றைக்கு நாம் தண்ணீரை விலை கொடுத்து தான் வாங்க வேண்டியுள்ளது. எதிர்வரும் தலைமுைறயினர் காற்றையும் விலை கொடுத்து வாங்க நேரிடும். அதற்குள் நாம் விழித்துக் கொண்டு மரங்களை வளர்த்து பராமரிக்க வேண்டும். நம் குழந்தைகளுக்கும் மரக்கன்றுகள் நட்டு அதை முறையாக பராமரிக்க அறிவுறுத்த வேண்டும். படிக்கும் பாடங்களில் ஒரு பகுதியாக மரங்கள் வளர்ப்பு இருக்க வேண்டும்.




அந்தவகையில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரியில் மரங்கள் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் தருகின்றனர். கல்லுாரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் நடுவது பிரதானமாக வைத்துள்ளனர். நட்ட மரக்கன்றுகளை பராமரித்தும் வருகின்றனர். கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., திட்டத்தில் மரங்கள் வளர்ப்பு, பராமரிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.




இதில் உள்ள மாணவர்கள் பொது இடங்கள், கல்லுாரி வளாகங்கள், நீர்நிலைகளில் மரக் கன்றுகளை நட்டு வருகின்றனர். மரக்கன்றுகள் வளர்ப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கின்றனர். கடந்த மாதம் பெய்த கன மழையில் கல்லுாரி வளாகத்தில் இருந்த 30 அடி மரம் சாய்ந்து விட்டது. இந்த மரத்தை உயிர்பிக்கும் வகையில் என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் ஒன்று சேர்ந்து மரத்தை வேரோடு பெயர்த்து பக்க கிளை வெட்டி விட்டு எந்தவித இயந்திர உதவியின்றி மாணவர்கள் மரத்தை துாக்கி கொண்டு சென்று வேறு ஒரு இடத்தில் நட்டு உயிர் கொடுத்துள்ளனர். சில நாட்களில் மரம் துளிர்த்து விட்டதை பார்த்து மாணவர்கள் பூரிப்பு அடைந்தனர்.



மரங்கள் வளர்ப்பு அவசியம்



மரங்கள் வளர்ப்பு இன்றைய கால கட்டத்தில் அவசியமாகிறது. மரங்களை வளர்க்க நாம் முனைப்பு காட்டுவதில்லை.இருக்கிற மரங்களை மட்டும் வெட்டி சாய்க்கிறோம். மரத்தின் அவசியத்தை இன்னும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை. மரங்களை அழித்ததால் தான் நமக்கு தேவையான மழை பெய்யவில்லை. அதனால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு தண்ணீருக்கு அலைகிறோம்.


பிரசாந்த், பி.ஏ., 3 ம் ஆண்டு மாணவர் .



மரங்களை போற்றி பாதுகாப்போம்



மரங்களை நாம் அலட்சியப்படுத்த கூடாது. அவற்றை கடவுளுக்கு நிகராக மதிக்க வேண்டும். ஒரு மரத்தை வெட்ட பலமுறை யோசித்து கூடுமானவரை தவிர்க்க வேண்டும். ஆனால் மரத்தை வளர்க்க யோசிக்க வேண்டிய அவசியமில்லை. நினைத்த உடன் மரக்கன்றுகளை நட்டு விட வேண்டும். ஒரு தாய் குழந்தைகளை பேணி பாதுகாப்பது போல் மரங்களும் தன் உடல் முழுவதும் மனிதனுக்கு தான் அர்ப்பணிக்கின்றன. மனிதன் வாழ வழி வகுக்கும் மரங்களை போற்றி பாதுகாப்போம்.




காயத்ரி, பி.ஏ., 3 ம் ஆண்டு மாணவி.



மரங்களுக்கு முக்கியத்துவம்




கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டத்தின் மூலம் மரங்கள் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். கல்லுாரி வளாகம் முழுவதும் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்கின்றனர். பொது இடங்கள், கிராமங்களுக்கு சென்றால் கூட முதலில் மரக்கன்றுகளை நட்ட பிறகு தான் பிற பணிகளை செய்கிறோம். மரங்கள் வளர்ப்பின் அவசியம் பற்றி மக்களுக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். எங்கள் பணி தொடர்ந்து மரங்கள் வளர்ப்பில் இருக்கும்.



செந்திவேல், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்.



விழிப்புணர்வு வேண்டும்



இயற்கையாகவே மரங்கள் வளர்ப்பில் அக்கறை வர வேண்டும். நாம் இயற்கையை அலட்சியப்படுத்தியதால் இன்றைக்கு அவதிப்படுகிறோம். வீட்டிற்கு ஒரு மரம் என்பதை விட்டு ஒவ்வொரு வரும் கண்டிப்பாக மரத்தை வளர்த்தாக வேண்டும் என உறுதி எடுத்தால் நாடு மீண்டும் சோலையாக மாறும். இல்லையெனில் பாலைவனமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.


கீர்த்தனா, பி.ஏ., 3 ம் ஆண்டு மாணவி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X