கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தேசிய பேரிடர் தடுப்பு தினத்தை முன்னிட்டு, தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார்.தாசில்தார் செல்வக்குமார், தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் செந்தில்குமார், கடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன், சிப்காட் நிலைய அலுவலர் வீரபாகு மற்றும் தீணைப்பு வீரர்கள், வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், வெள்ளம் ஏற்படும் போது, எளிதில் கிடைக்கக்கூடிய டயர், டியூப், குடம் போன்றவற்றை வைத்து கொண்டு தப்பிப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர். தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.