நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், கட்டப்பட்ட சிறிய தரைபாலத்திற்கு தண்ணீர் செல்ல வாய்க்கால் கட்டாததால் பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.நடுவீரப்பட்டு-குமளங்குளம் வழியாக, கடலுார் செல்லும் மெயின் ரோடு உள்ளது. இந்த சாலையில், நைனாப்பேட்டையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ. 10 லட்சம் மதிப்பில் சிறிய தரைபாலம் கட்டப்பட்டது.இந்த பாலத்திற்கு தண்ணீர் வருவதற்கும், பாலத்திலிருந்து தண்ணீர் வெளியேறுவதற்கும் வாய்க்கால் கட்டவில்லை. இதனால் தற்போது இந்த பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.கழிவுநீர் ஓடுவதற்கு வாய்க்கால் கட்டி விட்டு பாலம் கட்டினால் தான் அந்த திட்டம் முழுமை பெறும். ஆனால் நடுவீரப்பட்டில் தண்ணீர் தேங்காத இடத்தில், தேவையில்லாமல் ரூ.10 லட்சம் செலவு செய்து பாலம் கட்டி பணம் வீணாக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பாலத்திலிருந்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.