மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி தமிழகம், அமைச்சர் சம்பத் பெருமிதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2019
23:31

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், 42,405 பயனாளிகளுக்கு ரூ.142 கோடியே 45 லட்சம் திருமண நிதி உதவியாகவும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் வீதம் மொத்தம் 211 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என, அமைச்சர் சம்பத் பேசினார். திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, கடலுார் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி வரவேற்றார். கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். அமைச்சர் சம்பத் 2,500 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது:தமிழகத்தில் பெண்களின் கல்வி கற்கும் நிலையை ஊக்குவித்து, அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 படித்த பெண்ணிற்கு, ரூ.25 ஆயிரத்துடன், திருமாங்கல்யம் செய்வதற்காக, 8 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.பட்டப்படிப்பு அல்லது பட்டயபடிப்பு பயின்று தேர்ச்சி பெற்ற பெண்ணிற்கு திருமண நிதி உதவியாக 50 ஆயிரம், 8 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம், கடந்த 8 ஆண்டுகளில், இம்மாவட்டத்தில் இதுவரை 42,405 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இவர்களில் 14,578 பேர் பட்டதாரிகள். 27,827 பேர் பட்டதாரி அல்லாத பயனாளிகளாகும்.இதுவரை கடலுார் மாவட்டத்தில், 42, 405 பயனாளிகளுக்கு 142 கோடியே 45 லட்சம் நிதி உதவியாகவும், 8 கிராம் வீதம் மொத்தம் 211 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2,500 பயனாளிகளுக்கு, 9.64 கோடி ரூபாய்க்கு, திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது. தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார். சேவல்குமார், ஒன்றிய செயலாளர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X