கடலுார்: இளந்தளிர் அமைப்பு சார்பில், சிறப்பு பட்டிமன்றம் கடலுாரில், நடந்தது. இன்றைய சூழ்நிலையில், முதுமைக்கு தோல் கொடுப்பதில் முதன்மை வகிப்பது குடும்பமே! சமூகமே! என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்திற்கு சிவாஜி தலைமை தாங்கினார். இளந்தளிர் அமைப்புத் தலைவர் முரளி வாழ்த்திப் பேசினார்.குடும்பமே என்ற அணியில், ஆசிரியர் அரி ஆனந்த், சீனு கிருஷ்ணமூர்த்தி, ஜமுனா ரவி ஆகியோரும், சமூகமே என்ற அணியில் நபில் புகாரி, ராஜா, ஆசிரியை லதா ஆகியோரும் வாதிட்டனர். இறுதியில், முதுமைக்கு தோல் கொடுப்பதில் முதன்மை வகிப்பது குடும்பமே என நடுவர் ஆரோக்கிய செல்வி தீர்ப்பு கூறினார்.