புகார் பெட்டி மூலம் குற்றங்கள் தடுக்கப்படும், விருத்தாசலம் ஏ.எஸ்.பி., தீபா சத்யன் உறுதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2019
23:35

விருத்தாசலம்: 'விருத்தாசலம் உட்கோட்டத்தில் நகர, கிராம பகுதிகளில் புகார் பெட்டிகள் வைத்து, குற்ற நடவடிக்கைகள் தடுக்கப்படும்' என ஏ.எஸ்.பி., தீபா சத்யன் தெரிவித்தார்.விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சந்திப்பில், போலீசார் சார்பில் புகார் பெட்டி திறப்பு விழா நடந்தது. சப் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் அன்பரசன், அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தனர். தனிப்பிரிவு ஏட்டு தனவேல் வரவேற்றார்.புகார் பெட்டியை திறந்து வைத்து, ஏ.எஸ்.பி., தீபா சத்யன் பேசியதாவது:விருத்தாசலம் உட்கோட்டத்தில், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடும், கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் முதற்கட்டமாக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், மணல் கடத்தல், சூதாட்டம், கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை போன்ற சமூக விரோத செயல்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.மேலும், மாணவ, மாணவிகளுக்கு, கல்வி பயிலும் நிறுவனங்கள் மற்றும் பஸ்சில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் மனுவாக தெரிவிக்கலாம். குண்டர்கள் மிரட்டி பணம் பறிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டால், வியாபாரிகள் தகவல் தெரிவிக்கலாம். புகார் பெட்டியில் போடப்படும் மனுக்கள் அனைத்தும், எனது மேற்பார்வையில் நேரடியாக விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.மனுதாரர் குறித்த விபரங்கள், ரகசியமாக வைக்கப்படும். போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார்கள் வரும் முன்னரே, இந்த புகார் பெட்டி மூலம் குற்றங்கள் தடுக்கப்படும். சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாரின் விசாரணை திருப்தியாக இல்லாவிட்டாலும், புகார் பெட்டியில் தெரிவிக்கலாம்.விருத்தாசலம் உட்கோட்டத்தில் நகர, கிராம பகுதிகளில் புகார் பெட்டிகள் வைத்து, குற்ற நடவடிக்கைகள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X