கடலுார்: கடலுாரில் வக்கீல் அருணாசலம் எழுதிய நான்கு நுால்கள் வெளியீட்டு விழா, நேற்று, நடந்தது. சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி விமலா தலைமை தாங்கி, 'வேண்டும் வேண்டும், கட்டாயம் வேண்டும்; வேண்டாம், வேண்டாம், வேண்டவே வேண்டாம்; கதம்பக் கட்டுரைகள், நினைவுகளின் ஊர்வலம்' ஆகிய தலைப்புகளில் நுால்களை வெளியிட்டு பேசினார்.நுால்களை குறும்பட இயக்குனர் சிவக்குமார், டாக்டர் ஞான சவுந்தரி ராஜேந்திரன், டாக்டர் சிவராஜ், ஜெகதீஷ் ராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டார். வக்கீல் பால தண்டாயுதம், கிருஷ்ணசாமி மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆயிஷா நடராஜன், சண்முக சிவாச்சாரியார் வாழ்த்தி பேசினர். வக்கீல் அருணாசலம் ஏற்புரையாற்றினார்.டாக்டர் சந்திரன், அரிமா சங்க முன்னாள் தலைவர் திருமலை, சுஜாதா சீனிவாசன், ராஜன், உமா சுதன், வக்கீல் சிவமணி, வள்ளி விலாஸ் பாலு, சுபஸ்ரீ வள்ளி விலாஸ் கணேசன், அகர்வால் ஸ்வீட்ஸ் எழிலரசன், ஓட்டல் அபிராம் ஞானசந்திரன், பவானி மசாலா ஜெய்சங்கர், பாண்டி ைஹடெக் மிஷினரிஸ் வெங்கடேசன், சங்கமம் ரோட்டரி சங்கம் ரவிச்சந்திரன், உதயம் சூப்பர் ஸ்டோர் சாதிக் அலி, ஆடிட்டர் சீனிவாசன், அரிமா சங்கம் நாகராஜன், சன் பிரைட் என்டர்பிரைசஸ் பிரகாஷ், புகழ் பிரிண்டர்ஸ் புகழேந்தி, சி.சி.சி.,கம்ப்யூட்டர் பயிலகம் பத்மகுமார், அருணாசலா அண்டு லட்சுமி பி.வி.சி.,பைப் நாராயணசாமி பங்கேற்றனர்.