பாப்ஸ்கோ 'தீபாவளி பஜார்' இந்தாண்டு நடக்குமா!...புதுச்சேரி மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2019
02:03

புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில், கடந்த 1995ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டிகையின் போது,'தீபாவளி பஜார்' நடத்துவது வழக்கம்.


மளிகை பொருட்கள், பட்டாசு, துணி உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும் மலிவான விலையில் கிடைப்பதால், தீபாவளி பஜாருக்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.புதுச்சேரி நகரில்தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி மற்றும் திருமண மண்டபம் என, இரு இடங்களிலும், கிராம பகுதிகளை உள்ளடக்கி வில்லியனுார், பாகூர், திருக்கனுார், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் பஜார் நடத்தப்பட்டது. ஆண்டு தோறும் ரூ. 10 கோடிக்கு குறையாமல் வியாபாரம் நடந்து வந்தது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இதுவரையில், தீபாவளி பஜார் துவங்குவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் கூட பாப்ஸ்கோ நிறுவனம் துவங்கவில்லை.


தீபாவளி பஜார் நடத்த ஏற்பாடுகளை செய்யும்படி, அரசு சார்பில், பாப்ஸ்கோ அதிகாரிகளிடம், கோப்புகள் தயாரிக்க கூறப்பட்டது.ஆனால், இருக்கின்ற பிரச்னையில் இதுவேரையா என, அதிகாரிகள் தரப்பு பின்வாங்கியது. பாப்ஸ்கோ நிறுவனம், ஊழியர்களுக்கு சம்பளம் கூட போட முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. பட்ஜெட்டில் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கியும் இதுவரையில் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காமல், போராட்டம் நடத்தி வருகின்றனர்.அத்துடன், கடந்த காலங்களில் பஜார் நடத்த பொருட்கள் கொள்முதல் செய்தவர்களுக்கே இன்னும் பாக்கி உள்ளதால், தற்போது கொள்முதல் செய்வதற்கு நிதி தேவைப்படும். இதே பிரச்னை கடந்த ஆண்டும் ஏற்பட, தீபாவளிக்கு ஒருவாரத்திற்கு முன்பு வரை, பஜார் நடத்த அரசு முயற்சித்தும் நடத்த முடியாமல் போனது. இதனால், பொதுமக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.எனவே, இந்த ஆண்டு தீபாவளி பஜாரை நடத்தியே தீர வேண்டும் என, அரசு முனைப்பு காட்டியது. ஆனால், கடந்த ஆண்டை விட பிரச்னை கூடுதலானதே தவிர குறையாததால், தீபாவளி பஜார் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.தீபாவளி பஜார், 15 நாட்களுக்கு குறையாமல் நடத்த வேண்டும். அதன்படி பார்த்தால் தற்போது பஜார் திறக்க வேண்டும்.


ஆனால், இதுவரையில் அதற்கான ஆயத்த பணிகள் எதுவும் நடக்கவில்லை. அப்படியே குறைந்த நாட்கள் நடத்தி, பட்டாசு மற்றும் குடிமைபொருள் துறை மூலம் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, மைதா, ஆயில் உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே பஜாரில் விற்பனை செய்யலாம் என்ற எண்ணமும் அரசிடம் உள்ளது. ஆனால், அதற்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வேண்டும்.


எனவே, குறைந்த நாட்கள் பஜாருக்கு கூட வாய்ப்பு இருக்காது என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில், பாப்ஸ்கோவின் தீபாவளி பஜார் நடக்குமா, நடக்காதா என, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X