கவர்னர் கிரண்பேடி மீது தேர்தல் துறையில் புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2019
02:03

புதுச்சேரி: தேர்தல் விதிமுறைகளை மீறி கவர்னர் கிரண்பேடி நடந்து கொள்வதால், அவர் மீது தேர்தல் துறையில் புகார் செய்யப் போவதாக முதல்வர் கூறினார்.காமராஜ் நகர் தேர்தல் பிரசாரத்தில் இருந்த முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:காமராஜ் நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து புதுச்சேரி பிராந்தியம் முழுவதும், தேர்தல் நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடக்கூடாது, மறு ஆய்வு கூட்டம் நடத்தக்கூடாது. ஆனால் அவர், தினமும் பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து பேசுகிறார். இது தேர்தல் விதிமுறை மீறிய செயல். இதனை நிறுத்த அவருக்கு கடிதம் எழுதியும், விதிகளை பற்றி கவலைப்படுவதில்லை.ஏனாம் பிராந்தியத்தில், மத்திய அரசின் ரூ.129 கோடி நிதியில் வெள்ளத் தடுப்பணை,கோதாவரியில் மணல் எடுத்து விற்பனை செய்வது, வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்குவது, அம்பேத்கர் மணி மண்டபம் கட்டுவது உள்ளிட்ட 17 திட்டங்களை தடுத்து நிறுத்தி வைத்துள்ளார்.கிரண்பேடி கவர்னராக செயல்படவில்லை. அவருக்கு விளம்பரம் வேண்டும். சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில், வாட்ஸ் ஆப் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தினமும் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகிறார். அவர் மீது வழக்கு போட்டும் திருந்தவில்லை.ஏனாமில் நமக்கு சொந்தமான இடத்தை ஆந்திராவுக்கு சொந்தம் என கூறி, புதுச்சேரி மாநில உரிமையை கிரண்பேடி விற்கிறார்.கவர்னர் கிரண்பேடி ஏனாமிற்கு ஆய்வு செய்ய போகக்கூடாது,அதனை மீறி செயல்படுகிறார். இதுகுறித்து தேர்தல் துறையில் புகார் தெரிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X