போலீஸ் டைரி: பெண்ணிடம் நகை பறிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2019
03:17

பீர்க்கன்காரணை: பெருங்களத்துார், குமரன் நகர் விரிவு, நான்காவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர், சத்தியமூர்த்தி, 65. இவரது, மனைவி, காந்திமதி, 58. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில், காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள, கோவிலுக்கு சென்று வீடு திரும்பினார்.குமரன் நகர் பிரதான சாலை அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த, இரண்டு மர்மநபர்கள், காந்திமதியிடம், 11 சவரன் செயினை பறித்து தப்பினர். பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.


மொபைல் திருடிய வாலிபருக்கு, 'காப்பு!


'திருமுல்லைவாயில்: திருமுல்லைவாயில், அந்தோணி நகரைச் சேர்ந்தவர், தீபகுமார், 32; ரயில்வே ஊழியர். இவர், 10ம் தேதி, மாலை, 4:00 மணியளவில், திருமுல்லைவாயல், சிவசக்தி நகரில் உள்ள, டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது மொபைல் போனை மர்ம நபர் திருடி உள்ளார். திருமுல்லைவாயில் போலீசார் விசாரித்து, அயப்பாக்கத்தைச் சேர்ந்த குரு, 35, என்பவரை நேற்று கைது செய்தனர். இவரிடம் இருந்து, மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.


மின்சாதன பொருட்கள், 'ஆட்டை'


செங்குன்றம்:- செங்குன்றம் அடுத்த, காந்தி நகரில், அதே பகுதியை சேர்ந்த, ரமேஷ் என்பவர், மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, 9:00 மணியளவில், கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, மின் சாதன பொருட்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா, 'ஹார்டு டிஸ்க்' ஆகியவை திருடுபோனது தெரிந்தது. செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.


மாணவர்களின் மொபைல் திருட்டு


ராயப்பேட்டை: அரசு நடத்தும், ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பில் சேருவதற்கான நுழைவு தேர்வு, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள நியூ கல்லுாரியில் நேற்று நடந்தது. தேர்வு எழுத வந்த நுாற்றுக்கணக்கான மாணவர்கள், தங்களது இருசக்கர வாகனங்களை வெளியே நிறுத்தி சென்றனர். மேலும், மாணவர்கள் தங்களது மொபைல் போனை வாகனத்தின் பெட்டியில் வைத்து சென்றனர். பின் தேர்வு எழுதி வெளியே வந்து, வாகனத்திலிருந்த மொபைல் போனை பார்த்தபோது, ஐந்து பேரின் மொபைல் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. ராயப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X