சென்னை:தென் ஆப்ரிக்காவில் நேற்று துவங்கிய, 'வலுவான நகரங்கள் - 2030' என்ற கருத்தரங்கில், இந்தியா சார்பில், தமிழக பா.ஜ., இளைஞர் அணி தலைவர், வினோஜ் செல்வம் பங்கேற்றுள்ளார்.
'வலுவான நகரங்கள் - 2030' என்ற தலைப்பில், சர்வதேச கருத்தரங்கம், தென் ஆப்ரிக்கா நாட்டின், ஜோகன்னஸ்பர்க் நகரில், நேற்று துவங்கியது.மூன்று நாட்கள் நடக்கும் இந்த கருத்தரங்கம், நாளை நிறைவடைகிறது.வலுவான நகரங்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம், 2018ல், ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தாண்டு, தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கருத்தரங்கு நடத்துகிறது.இதில், கருப்பொருளாக, 'நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க புதுமையான அணுகுமுறைகள்' என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தியாவின் சார்பில், தமிழக பா.ஜ., இளைஞர் அணி தலைவர், வினோஜ் செல்வம் பங்கேற்றுள்ளார்.சுத்தமான குடிநீர் வழங்குதல், மழைநீர் சேகரிப்பு மற்றும் பயன்பாட்டு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் உள்ளிட்ட, பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களை, கருத்தரங்கில் எடுத்துரைக்க உள்ளார்.