ஆன்மிக வகுப்பு! வடபழநி ஆண்டவர் கோயிலில் நல்லொழுக்கத்தை வளர்க்க....சான்றிதழுடன் பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

14 அக்
2019
05:13
பதிவு செய்த நாள்
அக் 14,2019 03:23

சென்னை:வடபழநி ஆண்டவர் கோவிலில் நடந்த, தமிழ் ஸ்லோகம், திருப்புகழ் உள்ளிட்ட, ஆன்மிக வகுப்பில் பங்கேற்று, முதல் பகுதியை முடித்த, மாணவ - மாணவியர், சான்றிதழ் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.இளம் சிறார்கள் ஆன்மிக பக்தியுடன் நல்லொழுக்கங்களை கற்று வளர வேண்டும் என்ற நோக்கத்தில், வடபழநி ஆண்டவர் கோவிலில், தமிழ் ஸ்லோகம், திருப்புகழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பத்து வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு, நான்கு பகுதிகளாக, ஓராண்டிற்கு, தமிழ் ஸ்லோகம், திருப்புகழ், நல்லொழுக்க சிந்தனைகள், சாஸ்திர -விஞ்ஞான பிணைப்பு உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒரு வகுப்பில், 25 மாணவ - மாணவியருக்கு பயற்சி அளிக்கப்படுகிறது.இந்த ஆன்மிக பயிற்சியின், முதல் பகுதி, மே மாதம் துவங்கி கடந்த, 30ம் தேதி நிறைவு பெற்றது. பயிற்சியை நிறைவு செய்த மாணவ - மாணவியருக்கு, வடபழநி ஆண்டவர் கோவில், தக்கார் எல்.ஆதிமூலம், சான்றிதழ்கள், பை, எழுது பொருட்கள் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், மாணவ - மாணவியருக்கு, ஸ்லோகம் கற்றுக் கொடுத்த, ஆசிரியர் கோபாலகிருஷ்ணன், திருப்புகழ் ஆசிரியை, அருணாஸ்ரீ ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பிள்ளைகள் ஆன்மிக சிந்தனை, நல்லொழுக்கத்துடன் வளர வேண்டும் என்ற எண்ணத்துடன், வகுப்புகளுக்கு அனுப்பிய பெற்றோரை கவுரவிக்கும் வகையில், பகவத்கீதை பரிசாக வழங்கப்பட்டது.பயிற்சி வகுப்பு குறித்து, கோவில் தக்கார் ஆதிமூலம் கூறியதாவது:மாணவ - மாணவியர் தான் நாட்டின் எதிர்காலம். அவர்களுக்கு, நல்லெண்ணமும், ஆன்மிக சிந்தனையும், இளம் வயதிலேயே விதைக்க வேண்டும். அதுவே, இந்த ஆன்மிக வகுப்புகளின் நோக்கம். முதல், 'பேட்ச்'ல் முதல் பகுதி முடித்தோருக்கு சான்றிதழ்கள் வங்கப்பட்டுள்ளன. இரண்டாவது, 'பேட்ச்' விஜயதசமி அன்று துவக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு, 500 சிறார்களுக்கு ஆன்மிக வகுப்புகள் நடத்தி, நல்லொழுக்கத்தை வளர்க்க வேண்டும் என்பது குறிக்கோள். இவ்வாறு அவர் கூறினார்.பயற்சி முடித்து சான்றிதழ் பெற்ற சிறார்களின் பெற்றோர் கூறியதாவது:நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, விளையாட்டு, ஆன்மிக சிந்தனை ஆகியவை, இக்கால சிறார்களிடம் முடங்கி போயுள்ளது. அவர்களிடம் இயலாமை, சோர்வு காணப்படுகிறது. வடபழநி ஆண்டவர் கோவிலில், இதற்கு தீர்வாக, தமிழ் ஸ்லோகம், திருப்புகழ் உள்ளிட்ட வகுப்புகள் விளங்குகின்றன. கடந்த, மூன்று மாதங்களில், எங்கள் பிள்ளைகளிடம் நல்ல வித்தியாசம், சுறுசுறுப்பு காணப்படுகிறது. அவர்கள் அணுகுமுறையிலும் மாற்றம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
14-அக்-201920:35:41 IST Report Abuse
RM congrats! Thank you dinamalar for this news. It will make others to initiate such a good programme which our younger generation needs a lot.
Rate this:
Cancel
Mal - Madurai,இந்தியா
14-அக்-201915:31:41 IST Report Abuse
Mal Thanks for helping to revive our traditions. Good work sirs...
Rate this:
Cancel
K.Ravi - Bengaluru,இந்தியா
14-அக்-201913:08:07 IST Report Abuse
K.Ravi ஐயா தாங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி, இதுபோல் தமிழ்நாட்டில் இன்னும் நிறைய இடங்களில் இதை விரிவுபடுத்த வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X