| பாரிமுனையில் சிக்கிய 46 கிலோ வெள்ளி கட்டி Dinamalar
பாரிமுனையில் சிக்கிய 46 கிலோ வெள்ளி கட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 அக்
2019
03:38

பிராட்வே:பாரிமுனை அருகே, தங்கும் விடுதியில் பதுக்கிய, 46 கிலோ வெள்ளிக் கட்டிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.



பூக்கடை, யானைக்கவுனி, பாரிமுனை, சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், உரிய ஆவணமின்றி, தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் பதுக்கி வைத்திருப்பதாக, பூக்கடை துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலான, தனிப்படை போலீசாருக்கு, தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு, தனிப்படை போலீசார், சவுகார்பேட்டை, சுற்றுவட்டார பகுதிகளில், அதிரடி ஆய்வு நடத்தினர்.இதில், சமுத்திர முதலி தெருவில் உள்ள, தங்கும் விடுதியில், உரிய ஆவணமின்றி, 46 கிலோ வெள்ளிக் கட்டிகளை, சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த பழனிவேல், 45, என்பவரை, கைது செய்த போலீசார், வெள்ளிக்கட்டிகளையும், பிடிப்பட்டவரையும், சென்னை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X