எண்ணுார்:குடும்ப தகராறில், தனியார் நிறுவன ஊழியர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எர்ணாவூர், பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர், முரளிநந்தன், 47; தனியார் கனரக வாகன தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவர் மனைவி, ராஜகோகிலா. இவர்களுக்கு, இரு மகள்கள் உள்ளனர்.கணவன் - மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்படும் என, தெரிகிறது. இந்நிலையில், நேற்று மதியம், மாடியில் உள்ள தனி அறையில், முரளிநந்தன், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த எண்ணுார் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.