| சீன அதிபர் வந்து சென்றதையடுத்து போலீசார் நிம்மதி Dinamalar
சீன அதிபர் வந்து சென்றதையடுத்து போலீசார் நிம்மதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 அக்
2019
03:43

அடையாறு:சீன அதிபர் வருகையையொட்டி, ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., பகுதிகள், 10 நாட்களாக போலீசாரின் தொடர் கண்காணிப்பில் இருந்தது. இதனால், இங்கு, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் ஏதும் பதிவாகாததையடுத்து, போலீசார் நிம்மதி அடைந்தனர்.



இந்தியா - சீனா இடையிலான, அரசு தரப்பு பேச்சு, மாமல்லபுரத்தில், இரண்டு நாட்கள் நடந்தன. இதற்காக, சீன அதிபர் ஸீ ஜின்பிங், சென்னை வந்திருந்தார்.கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி, இரு நாட்களும், சாலை வழியாக, மாமல்லபுரம் சென்றார். இதனால், சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.குறிப்பாக, சீன அதிபர் செல்லும் சாலையான, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., சாலைகள், 10 நாட்களாக போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருந்தது.தொடர் கண்காணிப்பில் இருந்ததால், இந்த பகுதியில் எந்தவித குற்றச்சம்பவங்களும் நடைபெறவில்லை.


இது குறித்து போலீசார் கூறியதாவது:தினமும், எதாவது ஒரு வழிப்பறி, திருட்டு, சம்பவங்கள் நடைபெறும். பெரிய சாலை முதல், சிறிய தெருக்கள் வரை, ரோந்து பணியில் இருந்தோம். சாலையில் இருந்த கேமராக்கள், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இதனால், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை. 10 நாட்கள், நிம்மதியாக இருந்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X