| உஷாருங்க...உஷாரு!ண விவசாய நிலங்களை பாழாக்கும் ரசாயன உரம்... போதிய விளைச்சல் இன்றி நஷ்டத்துக்கு வழி Dinamalar
உஷாருங்க...உஷாரு!ண விவசாய நிலங்களை பாழாக்கும் ரசாயன உரம்... போதிய விளைச்சல் இன்றி நஷ்டத்துக்கு வழி
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

14 அக்
2019
07:15
பதிவு செய்த நாள்
அக் 14,2019 07:12

காரியாபட்டி:அதிக மகசூழ் கிடைக்க ரசாயன உரங்களை பயன்படுத்துவதோடு, காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகளில் ரசாயன மருந்துகளை தெளிப்பதால் நோய்கள் வரக் காரணமாக அமைகிறது. மனித ஆரோக்கியத்திற்கும், இயற்கை வளத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும், உயிர்கொல்லிகளால் வருங்கால சந்ததியினர் கடுமையாக பாதிக்கப்படுவர்.


மாவட்டத்தில் காய்கறிகள், தென்னைமரங்கள், பழ வகைகள், நெல், வாழை, வெள்ளரி, உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

குறைந்த நாட்களில் அதிக மகசூழ் பெற செயற்கை ரசாயன உரங்களை பயன்படுத்துவதோடு, விளைந்த காய்கறி, பழங்களில் ரசாயன மருந்துகளை தெளிக்கின்றனர்.

இதனை உட்கொள்வதால், உடல் உபாதை ஏற்பட்டு பல்வேறு நோய்கள் தாக்க காரணமாக அமைகிறது. ரசாயன உரத்தால் நிலங்களில் உள்ள புழுக்கள் செத்து மடிவதால், மண்ணில் உள்ள சத்துக்கள் குறைந்து, மலட்டுத் தன்மை ஏற்பட்டு, எந்த பயிர்களையும் விளைவிக்க முடியாத நிலமாக மாறிவிடுகிறது. அதே போல், ரசாயன உர பயன்பாட்டால், சிறு வயதிலேயே சிறுநீரக கோளாறு, இருதய பிரச்னை, சர்க்கரை வியாதி, கேன்சர் என

புதுப்புது வகையான நோய்கள் தாக்கி, மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

இதே நிலை நீடித்தால், வருங்கால சந்ததியினர் மிகக் கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும் என்பதை மக்கள் உணர வேண்டும். காய்கறி, பழவகைகள் உற்பத்தி செய்ய இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்க விவசாயிகள் முன்வர வேண்டும். குறைந்த மகசூழ் கிடைத்தாலும் ஆரோக்கியமாக வாழ முடியும்.

செயற்கை உரங்கள் பயன்பாட்டை அரசு ஊக்குவிப்பதை தவிர்த்து, இயற்கை முறையில் விளைவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவு பொருட்களில் தீமைகள் இருப்பதை அறிந்து மக்கள் அவற்றை தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் விவசாயம் செய்ய தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இயற்கை முறையில் உற்பத்தி செய்யுங்க


வியாபார நோக்கத்திற்காக சேர்க்கப்படும் ரசாயன மருந்துகளால், புதுப்புது வகையான நோய்கள் தாக்கி, சிறு வயதிலே உடல் உறுப்புகள் பாதித்து, உயிரிழக்கும் நிலையில் வாழ்கிறோம். மண்ணில் நச்சு தன்மை அதிகரித்து செடி, கொடிகள் வளர்க்க முடியாமல் போனது. இதே நிலை நீடித்தால் இன்னும் பல்வேறு இன்னல்கள் உருவாகும். பேக்கிங் உணவுகளை தவிர்க்க வேண்டும். பாரம்பரிய உணவு வகைகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்து அவற்றை பயன்படுத்த பழக வேண்டும். தரமான தானியங்களை உற்பத்தி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரசாயனம் தெளித்த பழங்கள், காய்கறிகளை அறவே தவிர்க்க வேண்டும்.

- சிவக்குமார், டிரஸ்ட் நிறுவனர், காரியாபட்டி


 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X