ஆக்கிரமிப்பில் அரசு நிலங்கள்; அலட்சியமாக அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2019
07:17

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையின் பல பகுதிகளில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்கள் ஆக்கரமிப்பில் உள்ளதை, அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மயான ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான பல இடங்கள் சிறிது சிறிதாக தனியார்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.



இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும். இதேபோன்று, இந்த பகுதியில் சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் நிரந்தர ஆக்கிரமிப்பில் உள்ளது.கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், இந்து சமய நிர்வாகம் அலட்சியத்தில் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள, நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கோயில் இடங்கள் தனியார் வசம் உள்ளது. இவற்றை கையகப்படுத்த அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மயான ரோட்டில் மேல்நிலை தொட்டிக்கு அருகில் உள்ள ஊரணி பல வருடங்களாக தனியார் வசம் உள்ளது. இதற்கு நகரமைப்பு அலுவலர்கள் துணை போயுள்ளனர். சொக்கலிங்கபுரம் நேரு மைதானம் பகுதியில் உள்ளநடை பாதையில், நகரமைப்பு அலுவலர்கள் ஆசியோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் போடப்பட்டுள்ளன. நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நகராட்சி இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

ஆக்கிரமிப்பு வழக்குகள் நீதிமன்றங்களில் பல வருடங்களாக நடந்து வருகின்றன. நகரமைப்பு அலுவலர்கள் இவற்றில் அலட்சியம் காட்டுவதால், பெரும்பாலான வழக்குகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக முடிந்து விடுகின்றன. இதற்காக 'சிறப்பு கவனிப்புகள்' நகரமைப்பு அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. நகராட்சி நிலங்களை சிறிது சிறிதாக ஆக்கிரமிப்புசெய்யவும், நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போவதும், வழக்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக முடிய வழி செய்வதும் தான் நகரமைப்பின் பணியாக உள்ளது. இதனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் கையகப்படுத்த முடியாமல் கிடக்கின்றன. பாலையம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள ஊரணி தனியார் வசம் ஆக்கிரமிப்பில் உள்ளது.

இன்றைக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல், இந்த இடத்தை மீட்க வருவாய்த்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மொத்தத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால், பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள அரசு நிலங்களை சில லட்சம் 'செலவு' செய்து, ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இவற்றை மீட்க மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X