| குடிமகன்களின் 'பாராக' மாறிய கிராம சேவை மையம் Dinamalar
குடிமகன்களின் 'பாராக' மாறிய கிராம சேவை மையம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 அக்
2019
22:59

மங்கலம்பேட்டை: கோ.பூவனுாரில் குடிமகன்களின் 'பாராக' மாறியுள்ள கிராம சேவை மையத்தை, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுார் கிராமத்தில், பொது மக்கள் பிறப்பு, இறப்பு மற்றும் முதியோர் உதவித் தொகை பெற, 10 கி.மீ., துாரம் உள்ள விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு தினசரி சென்று வருகின்றனர். கிராம மக்கள் நலன் கருதி, கடந்த 2013 - 14ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 13.12 லட்சம் மதிப்பில் கிராம சேவை மையம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இதனால், சமூக விரோதிகள் இந்த கட்டடத்தின் கதவை உடைத்து, இரவு நேரங்களில் மது குடிக்கும் பாராக மாற்றி உள்ளனர்.போதை தலைக்கேறிய குடிமகன்கள் பாட்டில்களை கட்டடத்தில் உடைத்து விட்டு செல்கின்றனர். சமூகவிரோத செயல்களும் நடக்கிறது. எனவே, சேதமடைந்துள்ள கிராம சேவை மைய கட்டட கதவை சீரமைத்து, கிராம மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X