நண்டோடையில் ஆகாயத் தாமரைகள் மழை காலத்தில் தண்ணீர் வடிவதில் சிக்கல் | கடலூர் செய்திகள் | Dinamalar
நண்டோடையில் ஆகாயத் தாமரைகள் மழை காலத்தில் தண்ணீர் வடிவதில் சிக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 அக்
2019
23:01

புவனகிரி: புவனகிரி அருகே வடிகால் வாய்காலான நண்டோடையில் ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ளதால், மழை காலங்களில் வயல்களில் தண்ணீர் வடிவதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை போர்க்கால அடிப்படையில் துார் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.சேத்தியாத்தோப்பு வாலாஜா ஏரியில் இருந்து பிரியும் முரட்டு வாய்க்கால் மற்றும் அதன் கிளை பாசன வாய்கால்களில், மேட்டூர் தண்ணீரை தேக்கி, விவசாயம் செய்யப்படுகிறது. புவனகிரி அருகே பின்னலுார், பிரசன்னராமாபுரம், உளுத்துார், கிருஷ்ணாபுரம், அம்பாள்புரம், ஆலம்பாடி சுற்று பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், ஐந்தாயிரம் ஏக்கரில், விவசாயம் செய்கின்றனர்.மழை காலங்களில் நெற்பயிரில் தேங்கும் தண்ணீரை நண்டோடை வடிகாலில் திறந்து விட்டு, சாத்தப்பாடி வடிகால் வாய்க்கால் மூலம் பரவனாற்றில் திறந்து விடுவது வழக்கம். ஆலம்பாடி வழியாக செல்லும் இந்த வாய்க்காலில் தற்போது சுமார் 5 கி.மீ., தொலைவிற்கு ஆகாயத்தாமரைகள் மண்டியுள்ளது. இதனால், மழைக் காலங்களில் தண்ணீர் வடிய வைக்கவும், வாய்க்கால் வலது பக்கம் நிலம் உள்ளவர்கள் பாசனம் பெறவும் முடியாமல் அவதிடைந்தனர்.இது குறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வடமேற்கு பருவமழை துவங்கும் முன், போர்க்கால அடிப்படையில் ஆகாயத்தாமரைகள் மற்றும் முட்புதர்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X