மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை 'டல்' பணப்புழக்கம் குறைவால் கடைகள் 'வெறிச்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2019
23:12

கடலுார்: தீபவாளி பண்டிகைக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் உள்ள கடைகளில், விற்பனை சூடுபிடிக்காமல் மந்த நிலையில் உள்ளன.


தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டுவது வழக்கம். தீபாவளி வருவதற்கு பல நாட்கள் முன்பே, பண்டிகை களை கட்ட துவங்கி விடும். ஜவுளி, பட்டாசு, மளிகை உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.புத்தாடை, இனிப்பு வகைகள், பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க அதிக அளவில் மக்கள் கூடுவர். தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே துணிக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். மளிகை கடை வியாபாரம் 2 வாரங்களுக்கு முன் கூட்டியே சூடு பிடிக்கும்.ஆனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், பெரும்பாலான கடைகள் வியாபாரம் இல்லாமல் 'டல்' அடித்து வருகிறது.


கடலுார், பண்ருட்டி, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் கூட்டம் வழக்கம்போல் தான் உள்ளது. மளிகை கடைகளிலும் கூட்டம் இல்லை. நிறைய பட்டாசு கடைகள் இன்னும் திறக்கப்படவே இல்லை.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை மாத கடைசியான 27 ம் தேதி வருகிறது. அரசு அலுவலகங்களில் வேலை செய்வோர் முதல் தேதியில் சம்பளம் வாங்குவர். அவர்களுக்கு 1ம் தேதி முதல் 10 ம் தேதி வரைதான் கைகளில் பணம் புரளும். அதற்கு மேல் வரும் செலவுகள் எல்லாம், அடுத்த மாதத்தில் வரும் சம்பள தேதியை எதிர்நோக்க வேண்டிய நிலை இருக்கும்.


இது ஒருபுறமிருக்க, தற்போது நாட்டில் பொருளாதாரம் மந்த நிலை உள்ளது. புதிய வாகனங்கள் விற்பனை இல்லை என பெரிய தொழிற்சாலைகள் நலிவடைந்துள்ளன. ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், பண்டிகை முன்பணம், போனஸ் போன்றவை தொழிலாளர்களால் கேட்டு பெறமுடியாத நிலை உள்ளது. இதனால் பொது மக்களிடத்தில் பணப்புழக்கம் மிகவும் குறைந்துவிட்டது.இதன் காரணமாக கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்கவில்லை. கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில் போன்ற இடங்களில் உள்ள ஜவுளி, மளிகை, இனிப்பு கடைகளில் பண்டிகை விற்பனை மிகவும் மந்தகதியில் உள்ளன.


விருத்தாசலத்தில் தள்ளுபடி விற்பனை போடப்பட்டுள்ளதால் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் ஓரளவுக்கு உள்ளது. ஒரு வேளை அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முன்கூட்டியே சம்பளம் வழங்கினால் தீபாவளி பண்டிகை சூடு பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X