வன விலங்குகளுக்கு உணவளிப்பது குற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2019
23:13

சிறுபாக்கம்: சேலம் - விருதை தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாக்கம் காப்புக்காடு பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குகளுக்கு உணவளிப்பது குற்றம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சிறுபாக்கம் அருகே வனத்துறைக்கு சொந்தமாக ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் காப்புகாடுகள் உள்ளன. இந்த காப்புகாடு சேலம் - விருதை தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூரில் இருந்து பெரியநெசலுார், அடரி, சிறுபாக்கம் வழியாக நைனார் பாளையம் வரை உள்ளது.இச்சாலையையொட்டி, இருபுறமும் அமைந்துள்ள காப்புக்காடுகளில் மான், மயில், காட்டுப் பன்றிகள் அதிகளவில் உள்ளன. இங்கு வசிக்கும் விலங்குகள் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்ல சாலையை கடக்க வேண்டி உள்ளதால் அப்போது அவ்வழியே வேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.மேலும், சாலையோரங்களில் நிற்கும் குரங்கு உள்ளிட் விலங்குகளுக்கு வாகனங்களில் செல்லும் பயணிகள் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுகளை வீசி செல்கின்றனர். இதனால் உணவுக்காக அவை சாலையில் வரும் போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன.இந்த உயிரிழப்புகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்ட வனத்துறை சார்பில், பயணிகளை எச்சரிக்கும் வண்ணம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, காப்புக்காடு பகுதிகளில் உள்ள விலங்குகளுக்கு உணவளிப்பது தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X