முதியோர் உதவி தொகை பெற உத்தரவு:வங்கியில் கணக்கு துவக்க அலைக்கழிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
05:25

அன்னுார்:முதியோர் உதவி தொகை பெறுவதற்கான உத்தரவு பெற்றவர்களுக்கு, வங்கி கணக்கு துவக்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.கடந்த ஜூன் மாதம் அன்னுார் தாலுகா அலுவலகத்தில், மூன்று நாட்கள் ஜமாபந்தி நடந்தது. கலெக்டர் ராஜாமணி மூன்று நாட்களும் பங்கேற்று மனுக்கள் பெற்றார். அப்போது முதியோர் உதவி தொகை கோரி, 500க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்தனர்.


மனுதாரர்கள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி வருவாய்த் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த மாதம், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு முதியோர் உதவி தொகை பெற உத்தரவு வழங்கப்பட்டது.இதில் அன்னுார் பேரூராட்சியை சேர்ந்தவர்களிடம், அதிகாரிகள், அன்னுார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்கி, அந்த நகலை ஒப்படைக்கும்படி அறிவுறுத்தினர்.இதன்படி, வங்கி கணக்கு துவக்க, முதியோர்கள் இருவாரங்களாக பல முறை சென்றும் சேமிப்பு கணக்கு இதுவரை துவக்கி தரப்படவில்லை.


இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர்கள் கூறுகையில், 'முதியோர் உதவி தொகை பெறுவோர் பரம ஏழைகள். மாதம், 1,000 ரூபாய் அரசிடம் இருந்து வந்தவுடன், அதை எடுத்துக் கொள்வார்கள். அதிகமாக வரவு செலவு செய்ய மாட்டார்கள் எனக் கருதி, வங்கியில் தாமதம் செய்கின்றனர்.'அன்னுாரில், தேசியமயமாக்கப்பட்ட வேறு வங்கியின் கிளைகள் ஐந்து உள்ளன. வருவாய்த்துறை அதிகாரிகள், அதில் ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு துவக்க அனுமதிக்க வேண்டும். அல்லது இந்த வங்கியில் பேசி முதியோருக்கு கணக்கு விரைவில் துவக்கித்தரும்படி செய்ய வேண்டும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X